பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைந்து போகும்படி சொல்வார்கள். தொடர்ந்து நின்று மறியல் செய்யும் தொண்டர்களை - ஆணென்றும் பெண் என்றும் பாராது - போலீசார் முரட்டுத்தனமாகத் தடிகொண்டு தாக்கி அடித்து நொறுக்குவார்கள், பிறகு அவர்களை கைது செய்து போலீஸ்வேன்களில் ஏற்றிக் கொண்டு போவார்கள். - இவற்றை எல்லாம் காண நேர்ந்த மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்களுக்குள் இஷ்டம் போல் பேசியபடி போவார்கள். மிகு உணர்ச்சி வசப்படும் ஒருசிலர் துணிந்து ஏதாவது செய்துவிடுவதும் உண்டு. அப்படித்தான், அண்ணன் உடன் படித்த நடராஜன் என்கிற மாணவன் திடீரென்று காணாமல் போய்விட்டான். மூன்று நான்கு நாள்கள் அவன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. அப்புறம் ஒரு நாள் வந்து நின்றான். தனது வீரசாகசச் செயலை பெருமையாகப் பேசினான். தொண்டர்கள் மறியல் செய்வதையும், அடிபடுவதையும், அந்நிலையிலும் அவர்கள் மகாத்மா காந்திக்கு ஜே வந்தேமாதரம் என்று சொல்லிக்கொண்டு அமைதியாக நிற்பதையும் தொடர்ந்து பார்த்த நடராஜன் மிகு உணர்ச்சிவசப்பட்டான். அவனும் மறியல் செய்ய வேண்டும் என்று நினைத்தான். தெற்கு பஜாரிலோ, பாளையங்கோட்டையின் வேறு பகுதியிலோ கடைமுன் நின்று மறியலி ல் ஈடுபட்டால், இதர மாணவர்களும் மற்றும் அவனை தெரிந்தவர்களும் கண்டு கொண்டு தடுக்கக்கூடும் என்று அவன் எண்ணினான். அதனால் அவன் திருநெல்வேலிக்குப் போய், அங்கே மறியல் செய்த தொண்டர் களுடன் சேர்ந்து செயலாற்றினான். வழக்கம் போல் போலீசார் வந்து, தொண்டர்களை அடித்து இழுத்துச் சென்ற போது அவனையும் வேனில் ஏற்றிப் போயினர். பல மைல் தூரம் போய், வெம்பரப்பான அத்துவானக்காடு மாதிரியான இடத்தில் எல்லோரையும் இறக்கி விட்டுவிட்டு, வண்டியோடு போய்விட்டார்கள் காவலர்கள். தொண்டர்களோடு சேர்ந்து அந்த மாணவனும் பசி பட்டினியோடு நெடுந்தொலை நடந்து அவரவர் இடம் சேர்ந்தனர். இந்த நிகழ்ச்சியைக் கூறிய மாணவன் உடம்பில் அடிபட்டு ஏற்பட்டிருந்த காயங்களைக் காட்டினான். இவ்விதம் உணர்ச்சிவசப்பட்டு செயல் புரிந்தவர்கள் பலராவர். தேசபக்தி உணர்வு நாடு நெடுகிலும் பரவி இருந்தது. அந்த உணர்வைத் தூண்டி விடும்தன்மையில் பிரிட்டிஷ் ஆட்சியினரின் செயல்பாடுகளும் 122 38 வல்லிக்கண்ணன்