பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டத்திலும் தேவைப்படுகிற பணிகளை ஆர்வத்தோடு செய்யும் தொண்டர் அவர் வீரச் செயல்கள் புரிவதிலும் அவர் நாட்டம் கொண்டிருந்தார். 1933இல் தாமிரவர்ணி ஆற்றில் பெரும் வெள்ளம் புரண்டோடியது. திருநெல்வேலி ஜங்ஷன் கடைத்தெருவில் கூட தண்ணிர் புகுந்துவிட்டது. கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் பாலத்தில் கமான் வளைவு (ஆர்ச்)களை மறைத்து மூடிவிட்டது தண்ணிர். அந்நிலையில், தைப்பூசம் மண்டபத்தின் தட்டட்டியில் (மொட்டை மாடி) நாலைந்து பரதேசிகள் சிக்கிக்கொண்டார்கள். பொதுவாக எந்நேரமும் பண்டாரம் பரதேசிகள் பிச்சைக்காரர்கள் தங்கும் இடமாக அமைந்திருந்தது அந்த மண்டபம். அவர்களில் பலர் இரவிலும் அங்கேயே படுத்துத் துரங்குவார்கள். ஆற்றில் திடீரென்று வெள்ளம் வந்துவிட்டால், மண்டபத்தில் தங்கியிருப்பவர்கள் தப்பி ஓடிக் கரைசேர முடியாத நிலைமை ஏற்பட்டால், ஆள்கள் மண்டபத்தின் மேலே ஏறி தட்டட்டியில் தங்குவதற்கு வசதியாக இரும்பு ੋਫਰੀ அங்கு நிலையாக, அழுத்தமாக பதிக்கப்பட்டிருந்தது. - இம்முறை திடீரென்று இரவு நேரத்தில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால், மண்டபத்தில் தங்கியிருந்த பரதேசிகள் பதறி அடித்து ஏணியில் ஏறி மண்டபத்தின் உயர் தளத்தை அடைத்து விழித்தபடி இருந்தார்கள். தண்ணிர் குறைவதாகயில்லை. வெள்ளம் மேலும் மேலும் பெருகி வந்தது. மண்டபத்தின் மேல் தளத்தை நீர்ப்பெருக்கு தொட்டுவிடும் போல் தோன்றியது. எந்த நேரத்திலும் மண்டபத்தை மூழ்கடிக்கக் கூடிய அளவுக்கு தண்ணிர் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவியது. விடிந்ததும் ஆற்றின் பெரிய வெள்ளம் பற்றியசெய்தி திருநெல்வேலி பாளையங்கோட்டை எங்கும் பரவியது. வேடிக்கை பார்ப்பதற்காக மக்கள் கும்பல் கும்பலாக வந்து கூடினார்கள். யாரும் பாலத்தின் மீது போகக்கூடாது. அது ஆபத்து என்ற எச்சரிக்கைக் குரல் கொடுக்கப். பட்டவாறு இருந்தது. மண்டபத்தின் மீது பயந்தபடி நடுங்கிக்கொண்டிருந்த பரதேசிகள் பரிதாபத்துக்குரியவர்களாகத் தென்பட்டார்கள். நம்மபாடு அவ்வளவு நிலைபெற்ற நினைவுகள் 3; 127