பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருசமயம் பக்கத்து வீட்டு வக்கீல் சுப்பையாமுதலியார் சொன்னார். அவர் சகல விஷயங்கள் பற்றியும் தாராளமாகக் கருத்துக்கள் வழங்குவது உண்டு. கோட்டைப்பிள்ளைமார் வீட்டுப் பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் வெளியே வந்து போகிற ஆண்களின் லெட்சணத்தைப் பார்த்தாலே, தெரியலையா பெண்களும் லெட்சணமாக இருக்க மாட்டார்கள் என்று ஆண்களில் எவராவது அழகன் என்று சொல்லக் கூடிய தன்மையிலே இருக்கிறாங்களா? இல்லையே. இவங்களைப் போலத் தானே பொம்பிளைகளும் இருப்பாங்க இவங்களை விட மோசமாகத் தான் இருப்பாங்க படிப்பு கிடையாது. வெளிஉலகத் தொடர்பு கிடையாது. பரந்த பார்வை இராது. குறுகிய மனமும் இருண்டபுத்தியுமா, இருக்கிற பெண்கள் எப்படி அழகாக இருக்க முடியும்? என்று சொன்னார். அது மாதிரிப் பெண்களை, அழகு தேவதைகளைப் பூட்டி வைத்துப் பாதுகாப்பது மாதிரி இருளடைஞ்ச பொந்துகளுக்குள்ளே அடைத்து வைத்து மேலும் அழகற்றவங்களாக ஆக்குவது தேவையில்லாதது. முன்காலத்திலே இருந்தாங்க போகட்டும் இந்தத் தலைமுறையிலாவது வாழ்க்கை முறையை மாற்றி இருக்கலாமில்லையா? என்றும் வக்கீல் முதலியார் அபிப்பிராயம் கூறினார். ஒரு மாறுதல் வருவதற்கு கோட்டையில் ஒரு கொலை நடக்க வேண்டியிருந்தது காலத்தின் லீலை அது. நான் ரீவைகுண்டத்தில் தங்கியிருந்த காலத்தில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரபரப்பு நிகழ்வும் நடந்தது. அத்தகைய பரபரப்பை உண்டாக்கியவன் காசித்தேவன் என்ற கொள்ளைக்காரன். குறுகிய காலத்தில் அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, காவல் துறையினரை அலைக்கழித்து, ஒரு ஹீரோ (வீரநாயகன்) அந்தஸ்தைப் பெற்றிருந்தான் காசித்தேவன். சுற்று வட்டாரத்தில் பல கொள்ளைகளை வெற்றிகரமாக நடத்திப் பெரும் பெயர் சம்பாதித்து விட்டான் அவன். போலீசுக்கு டிமிக்கி கொடுத்து, அங்கே இருக்கிறான் காசித்தேவன், இந்த ஊரிலே தென்பட்டான் என்றெல்லாம் பேச்சுக்குப் பொருளாகி வந்த அந்தக் கொள்ளைக்காரன் மக்களின் அன்பையும் ஆதரவையும் எளிதில் சம்பாதித்திருந்தான். . வசதி மிகுந்தவர்களிடம் கொள்ளையடித்தான் காசித்தேவன். 224 கி வல்லிக்கண்ணன்