பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் அதிர்ச்சி அடைந்தார். இதை அவர் எதிர்பார்த்தவரல்லர். ஏன் வேலையை விடlங்க எனக் கேட்டார். நான் அரசாங்க ஆபீஸ் குமாஸ்தா ஆகவே வாழ விரும்பவில்லை. எழுத்துத் துறையில் வளர்ந்து முன்னேறவே விரும்புகிறேன். அதற்கு இந்த வேலை தடையாக இருக்கிறது என்று சொன்னேன். வீட்டிலே பெரியவங்ககிட்டே எல்லாம் கலந்து ஆலோசித்தீர்களா என்று அவர் கேட்டார். இது என் சொந்த விஷயம் யாரிடமும் யோசனை கேட்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்று தீர்மானமாகச் சொன்னேன். நல்லா யோசித்துச் செய்யுங்க என்று அறிவுறுத்தினார் அவர், எனது இறுதியான முடிவு இது தான் நான் இதை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்று திட்டமாக அறிவித்தேன். அதன்பிறகு அவர் ஒன்றும் சொல்லவில்லை. எனது ராஜிநாமாக் கடிதத்தை மேல் ஆபீசுக்கு அனுப்பிவைத்தார். அங்கு அது ஏற்றுக் கொள்ளப்பட்டு உத்திரவு வந்த பிறகுதான் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வெளியேற முடியும். - மேல் ஆபீசிலிருந்து உரிய கடிதம் வருவதற்கு ஒரு மாதம் ஆயிற்று. அது வரை வழக்கம் போல் நான் அலுவலகம் சென்று எனது பணிகளை செய்து கொண்டிருந்தேன். விவசாய ஆபீசுக்கு பல வருடங்களாக இருந்த வந்த அந்தப் பெரிய வீடு தேவையில்லாதது; வேறு இடம், கடைத்தெருப் பக்கம் பார்க்க வேண்டும் என்று அந்தோணிப் பிள்ளை கருதினார். மேலிடத்துக்கு எழுதி அதற்கான இசைவு பெற்று, தகுதியான வேறு இடம் தேடினார். அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகிலேயே, ஒரு சிறு கட்டிடம் கிடைத்தது. அங்கு ஆபீசை மாற்றுவதற்கான அலுவல்களில் அவரும், மேஸ்திரியும், மெசஞ்சரும் மும்முரமாக ஈடுபட்டார்கள். அந்த இடத்தை நானும் போய் பார்த்தேன். எனக்கு அது பிடிக்கவே யில்லை. நல்ல வேளை இங்கு வந்து வேலை பார்ப்பதற்கு அவசியம் இல்லாமலே நான் வேலையை விட்டுவிட்டது நல்லதாயிற்று என்று என் மனம் சந்தோஷம் அடைந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்து சாமான்களை எங்கே 232 கி வல்லிக்கண்ணன்