பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்படியின் வலிமை அதிகரித்தவாறு இருக்கும். கடைசியாக வந்த பையனுக்கு பலமான அடிவிழும். பாடம் சரியாகப் படிக்காதிருந்தாலும், நன்றாகப் பாடத்தை ஒப்புவிக்கத் தவறினாலும் பழியாக அடிகொடுப்பார் அண்ணாவி. பள்ளிக்கூடம் என்றாலே வாத்தியாரின் நினைப்பு வந்தாலே, பையன்கள் அஞ்சி நடுங்குவது இயல்பாக இருந்தது. இப்படிக் கல்வி கற்பிக்கும் முறை அந்தக் காலத்தில் பரவலாக நாடு நெடுகிலும் இருந்தது. பழங்காலக் கல்விப் பயிற்சிமுறை பற்றியும் ஆசிரியர்கள் குறித்தும் விவரித்துக் கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர் வ.ரா. (வ.ராமஸ்வாமி) ஏரான் முறை, கோதண்டம் எமகண்டம் தண்டனை பற்றி எல்லாம் வர்ணித்திருக்கிறார். பையன்களை பள்ளியில் சேர்க்கிற பெற்றோர்களில் அநேகர், அடித்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் தான் நன்றாகக் கற்றுக் கொடுப்பார் என்று எண்ணம் வளர்த்தார்கள். பையன் ஒழுங்காக பள்ளிக்கூடத்துக்கு வராது போனால், அவன் சரிவரப் படிக்காதிருந்தால், நன்றாக அடிகொடுக்கும்படி அவர்கள் பரிந்துரைக் கவும் தயங்கியதில்லை. பெருங்குளத்தில் நாங்கள் முதலில் குடியிருந்த வீடு, பெரியரோடை விட்டு விலகிய ஒரு பகுதியில், ஊருக்குள் ஒதுக்கமான ஒரு தெருவில் இருந்தது. வீடு பெரியது தான். அங்கிருந்த காலத்தில், ஒரு மழைநாளில், வீட்டுக்கு எதிரே இருந்த தோட்டத்தின் மரம் ஒன்றில் ஒரு கிளி வந்து அமர்ந்தது. மழையில் நனைந்து குளிரில் நடுங்கிய அந்தக் கிளி திடீரென்று மரத்திலிருந்து கீழே விழுந்தது. அதை எடுத்து வரும்படி அப்பா வேலைக்காரனை அனுப்பினார். அவன் எடுத்து வந்து தந்தான். கிளி நோய்வாய்ப்பட்டிருந்தது. அதை வளர்க்கலாம் என்Лі அண்ணன் சொன்னான். அப்பாவும் இசைவு தெரிவித்தார். அதற்காக ஒரு கூண்டு வாங்கப்பட்டது. கிளியை கூண்டில் விட்டு, பால் பழம் கொடுக்கப்பட்டது. சிறிது சிறிதாக அது தேறி வருவதாகத் தோன்றியது. கூண்டினுள் தத்தித்தத்தி நடந்தது. அவ்வப்போது குரல் கொடுக்கவும் செய்தது. ஆயினும் அக்கிளி அதிகநாள் உயிரோடிருக்கவில்லை. ஒருநாள் அது செத்துக்கிடந்தது. அதை எடுத்து, குப்பைக் கிடங்கில் குழிதோண்டிப் புதைக்கும்படி அப்பா ஏவினார். வேலையாள் அவ்விதமே செய்தான். கிளிக்கென 56 3 வல்லிக்கண்ணன்