பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்தியிலே நடக்கிற கல்யாணங்களிலே, ஆண்பெண் ஜோடிகள் எப்படி எப்படியோ அமைந்து போகுது என்றும் அவன் சொன்னான். ராசாமகள் சிரித்துக் கொண்டே கேலியாக உனக்கும் யாருக்கும் முடிச்சுப் போட்டிருக்காராம்? நீ அதைக் கேட்டியா? என்று வினவினாள். எனக்கும் உனக்கும் தான் முடிபோட்டிருக்காரு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும் என்று முனிவர் சொன்னார் என்று சமையல்காரன் பதிலளித்தான். சிரித்தான். ராசா மகளுக்கு கோபம் பொங்கியது. ஒகோ, உனக்கு இப்படி ஒரு நினைப்பு இருக்குதா? ஆசையைப் பாரேன் என்று கத்தினாள். அவள் ஆத்திரம் தணியவில்லை. அங்கே இருந்த வெண்கல அகப்பையை எடுத்து, அவன் மண்டையில் ஆவேசமாக ஓங்கி அடித்தாள். அது ஆழமாகப் பட்டது. வெட்டுப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருகி வடிந்தது. அவள் ஆங்காரமாகக் கூச்சலிட்டாள். போ இனியும் இங்கே நிற்காதே. இந்த ஊரை விட்டே ஓடிப் போயிடு. இல்லைன்னு சொன்னா, ராசா கிட்டே சொல்லி உன்னை சிறையில் அடைக்க வைப்பேன் என்று கத்தினாள். அவன் பயந்துபோய் அரண்மனையை விட்டு வெளியேறினான். ஊரை விட்டு அந்த நாட்டை விட்டே வெளியேறினான். காடா செடியா, மேடா மடுவா, எங்கெங்கோ சுற்றித் திரிந்தான். ஊர் ஊரா, நாடு நாடாக அலைந்தான். அவனுக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. பக்கத்து தேசம் ஒன்றில், அதன் ராசா செத்துப் போனார். அவருக்கு பிள்ளைகள் இல்லை. பட்டத்துக்கு ஆள் தேடி அந்தக் காலத்து வழக்கப்படி ஒரு யானை தும்பிக்கையில் பூமாலையை கொடுத்து, அனுப்பினார்கள். அதன் பின்னாலேயே மந்திரிபிரதானிகள், சேனாதிபதி எல்லோரும் போனார்கள். யானை அங்குமிங்கும் அலைந்தது. ஒரு இடத்துக்கு வந்ததும், அங்கே நின்று கொண்டிருந்த ஒருவன் கழுத்தில் மாலையைப் போட்டது. அவனுக்கு மரியாதை செலுத்துவது போல் யானை தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கியது. எல்லோரும் அவனையே அரசனாக ஏற்று, அவனை யானை மீது அமர்த்தி அரண்மனைக்கு அழைத்து வந்தார்கள். முறைப்படி அவனுக்கு முடி சூட்டினார்கள். அவன் ராசாமகளால் விரட்டியடிக்கப்பட்ட பழைய நிலைபெற்ற நினைவுகள் 89