பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 109 நான் இவ்விவரத்தை ராமநாதனிடம் சொன்னேன். "சிரமம் எதுவுமில்லை. செஞ்சையாவிடமிருந்து நான் கடிதம் வாங்கித் தருகிறேன் என்றார் நண்பர். அவ்விதமே வாங்கித் தந்தார். 'இந்தக் கடிதம் கொண்டு வருபவரிடம் எனது கார்டுக்கு ைைலபிரரி புத்தகங்கள் கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று பொதுப்படையாக அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதை வாங்கிக் கொண்ட நூலகர் இரண்டுமுறை எதுவும் சொல்லவில்லை. நான் போலண்ட் சிறுகதைகள், ரஷ்யச் சிறுகதைகள் நூல்களை எடுத்துவந்தேன். நூலகர் மீண்டும் குறுக்கிட்டார். 'டிசெஞ்சையா தான் இந்தப் புத்தகங்களை எடுத்து வரச் சொன்னாரா?” என்று கேட்டார். இல்லை என்றேன். ‘இனிமேல் ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட இன்னபுத்தகம் வேண்டும் என்று செஞ்சையாவிடமிருந்து கடிதம் வாங்கி வரவேண்டும். அப்பதான் புத்தகம் தரமுடியும்’ என்று அவர் உறுதியாக அறிவித்தார். இதையும் நான் ராமநாதனிடம் கூறினேன். ‘கொடுக்காவிட்டால் போகட்டும். தொடர்ந்து ரஷ்ய ஆசிரியர்களின் புத்தகங்களையே எடுப்பதால், நாம் ஏதோ புரட்சிக்கு ஆயத்தம் செய்கிறோம் என்று அந்த ஆள் எண்ணி விட்டார் போலிருக்கு’ என்று சொல்லிச் சிரித்தார் நண்பர். எடுத்து வந்த புத்தகத்தைப் படித்து விட்டுத் திருப்பிப் கொடுத்ததோடு எனது லைபிரரித் தொடர்பு முற்றுப் பெற்றது. விதிகள், கட்டுப்பாடுகள் என்றெல்லாம் வைத்துக் கொண்டு, பழக விரும்புகிறவர்களின் ஆசைக்கும் ஆர்வத்துக்கும் தடை போடுகிற லைபிரரிகளின் உதவியை இனி நாடப் போவதில்லை. நான் படிக்க விரும்புகிற புத்தகங்களைப் புதுசுபுதுசாக நானே விலை கொடுத்து வாங்கிப் படித்துக் கொள்வேன் என்று உறுதிபூண்டது என் மனம், யுனிவர்சிட்டி லைபிரரிக்குப் போய் புத்தகம் எடுத்துக் கொண்டு திரும்புகிற ஒவ்வொரு தடவையும் நான் திருவல்லிக்கேணி பெல்ஸ்ரோடு சென்று, ஜோதி நிலையத்தில் அ.கி. ஜயராமனுடன் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாக்கினேன்.