பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நிலைபெற்ற நினைவுகள் போகவேண்டும். இப்படிச் சில வேலைகள் இருக்கு அதையெல்லாம் முடித்துவிட்டு சாயங்கால ரயிலில் போகவேண்டும். நீங்கள் தயாராக இருங்கள். நான் வந்து கூட்டிக் கொண்டு போவேன்’ என்று என்னிடம் ரெட்டியார் தெரிவித்தார். சக்திதாசன், ராமநாதன் இருவரிடமும் அவர் பேசினார். கிராம ஊழியனுக்குச் சரியான உதவி ஆசிரியர் இல்லை. வல்லிக்கண்ணனை அழைத்துப் போகலாம் என்று வந்திருக்கிறேன். இங்கு தான் அவருக்கு வேலை இல்லையே. இன்று சாயங்காலம் அவர் என்னோடு வரட்டும் என்று கூறினார். சக்திதாசன் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. அப்படியே செய்யுங்க என்ற இசைவு தெரிவித்தார். ரெட்டியார் தனது அலுவல்களைக் கவனிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார். அவர் போனதும், ‘என்ன, நீங்க துறையூர் போகப் போlங்களா? என்று சக்திதாசன் என்னைக் கேட்டார். நான் என் நிலையைச் சொன்னேன். ‘கிராம ஊழியன் உங்களுக்கு ஏற்ற இடம் தான். இருந்தாலும் நீங்கள் இவ்வளவு விரைவில் பிரிந்து போவீர்கள் என்று நான் நினைக்கவில்லை, நவசக்தியை இன்னும் சிறப்பாக, இலக்கியத் தரத்தோடு கொண்டு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு, ராமநாதன் இப்போதைக்கு இங்கே இருக்கிறார். சீக்கிரமே அவர் வேறு இடம் போய் விடுவார். உங்கள் துணையோடு இதழை மேம்படுத்தலாம் என்று எண்ணியிருந்தேன். நீங்கள் இப்பவே போகிறேன் என்கிறீர்கள். சரி. போய் வாங்க. உங்கள் எதிர்காலம் வெற்றிகரமாக விளங்கட்டும்’ என்று சோக உணர்வோடு பேசினார் சக்திதாசன். மாலையில் ரெட்டியார் வந்து என்னை அழைத்துக் கொண்டு சென்றார். இப்படியாக முடிந்தது எனது சென்னை வாழ்க்கை, 1943 டிசம்பரில் சென்னைக்கு வந்தேன். 1944 பிப்ரவரி இறுதியில் சென்னையைப் பிரிந்து சென்றேன். நிறைவாக மூன்று மாதங்கள் கூட நான் சென்னையில் வசிக்கவில்லை. அதற்குள்ளாகவே காலம் எனக்கு வேறு வழியைத் திறந்துவிட்டது.