பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مغربی سمتنجیم. سه سینع ۶يت:Fکwنتمَ சென்னையிலிருந்து ரயில் பயணம் செய்து திருச்சி சேர்ந்தோம். அங்கு மேலப் புவிவார் ரோடில் இருந்த, ரெட்டியாருக்குச் சொந்தமான வீட்டில் தங்கினோம். மறுநாள் துறையூர் பயணம் பஸ்சில். துறையூர், திருச்சிராப்பள்ளியில் இருந்து 28 மைல்கள் தள்ளி அமைந்துள்ள ஒரு சிற்றுார். எல்லா இடங்களையும் போல, அந்த ஊரும் இப்போது வேக வளர்ச்சி பெற்று, பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் அது, வளர்ந்திருந்த ஒரு கிராமம் போன்ற சாதாரணத் தோற்றமே கொண்டிருந்தது பிற்காலத்தில், திருச்சிக்கும் துறையூருக்கும் பஸ்போக்குவரத்து அதிகரித்து, பல கம்பெனிகளின் பஸ்கள் ஒடலாயின. 1940 களில் ஜெயவிலாஸ் எனும் ஒரு தனியார் கம்பெனியில் இரண்டு பஸ்களே ஒடிக்கொண்டிருந்தன. துறையூரில் இருந்து கிராம ஊழியன்' என்கிற மறுமலர்ச்சி இலக்கிய மாதம்இருமுறைப் பத்திரிகையை வெளியிடப் போகிறோம், அதற்கு உங்கள் வாழ்த்து வேண்டும் என்று கு.ப. ராஜகோபாலனும் திருலோக சீதாராமும் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரை அணுகினார்கள். அவர் வியப்புடன் கேட்டாராம், துறையூரிலிருந்தா? அந்த ஊரில் தபாலாபீஸ் இருக்கிறதா என்ன?’ என்று. அவ்வளவுக்கு சாதாரண ஊராக இருந்தது அது. எனினும், உயர்நிலைப்பள்ளிக்கூடம் ஒன்று, சினிமாத் தியேட்டர்கள் இரண்டு, சப் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், பெரிய தபாலாபீஸ் முதலியவற்றை அவ்வூர் பெற்றிருந்தது. அந்த ஊருக்கு 1944 பிப்ரவரி கடைசியில் நான் வந்து சேர்ந்தேன். காலம் என்னை அங்கே கொண்டு சேர்த்தது என்று சொல்ல வேண்டும்.