பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 : நிலைபெற்ற நினைவுகள் கிராம ஊழியன் அச்சகம், பெரிய கொட்டகை போன்ற நீளமாக ஒட்டுக் கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் ஓர் ஒரத்தில் ஒரு சிறு அறை. நீண்ட கொட்டகையில் தான் ட்ரெடில் மிஷின், சிலிண்டர் மிஷின், அச்சு எழுத்துக்கள் கொண்ட ஸ்டாண்டுகள், மற்றும் அச்சாபீசுக்கு உரிய பல்வேறு சாமான்களும் இருந்தன. பத்திரிகை அச்சிடுவதுடன், வேறு t_f Gö வெளிவேலைகளையும் பில் புத்தகங்கள், திருமண அழைப்பிதழ்கள், முதலியன ஏற்றுச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அச்சுக் கோப்பவர்கள் (கம்பாசிடர்ஸ்), டிரெடில்மேன், சிலிண்டர் மிஷினை இயக்குகிறவர்கள், எடுபிடிப் பையன்கள் என்று ஆட்கள் பலர் வேலையில் இருந்தார்கள். ரெட்டியாரும், திருலோகமும் நிர்வாக அலுவல்களைக் கவனித்தார்கள். பத்திரிகைக்கு உதவி ஆசிரியராக நான் அமர்த்தப்பட்டேன். இதுவரை நான் பணிபுரிந்த பத்திரிகைகளில் எனக்கு மாதச் சம்பளம் இவ்வளவு என்று பேசப்பட்டதுமில்லை நியமன உத்திரவு என்று எதுவும் தரப்பட்டதும் இல்லை. இங்கே எல்லாம் முறைப்படி செய்யப்பட்டன. கிராம ஊழியன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இன்ன தேதியிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அப்பாயின்ட் மென்ட் ஆர்டர்’ என்னிடம் தரப்பட்டது. மாதம் 25 ரூபாய் சம்பளம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டிடத்திலேயே நான் தங்கிக்கொண்டேன். ஊருக்கு வெளியே ஒரு பெரிய ஏரி இருந்தது. மழைபெய்தால் அதில் நீர் நிறைந்து கிடக்கும். ஊராருக்கும் குடி தண்ணிர் எடுப்பதற்கு என்று தனியாக அமைக்கப்பட்ட குளம் ஒன்று இருந்தது. பெண்கள் சதா அதிலிருந்து தண்ணிர் மொண்டு செல்வார்கள். அந்தக் குளத்தைக் கடந்துதான் ஏரிக்கரைக்குப் போகவேண்டும். ஏரி விசாலமானது. கரையும் உயரமாக நீண்டதுரத்துக்கு அமைந்திருந்தது. பக்கத்து ஊர்களுக்கு இட்டுச் செல்கிற பாதையாகவும் அது இருந்தது. ஏரியில் தண்ணிர் பெருகிக் கிடக்கிற காலத்தில் அதில் வசதியாகக் குளிக்கலாம். ஏரி வறண்டு கிடக்கும் சமயங்களில், வயல்களைத் தேடிப் போக வேண்டும். அங்கே விவசாயத்துக்காகக் கிணறுகள் வெட்டப்பட்டிருக்கும். அவற்றில் இறங்குவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கும். அக்கிணறுகள் எதிலாவது குளித்துவிட்டுத் திரும்பலாம்.