பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 119 துறையூர் வயல்களில் புளிச்சை பயிரிடப்பட்டு வளர்ந்து நிற்கும். புளிச்சைக் கீரையை (இலைகளை) மக்கள் சமையலுக்கு பயன்படுத்தினார்கள். புளிச்சை முற்றிய பிறகு அதன் தண்டிலிருந்து நார் எடுப்பார்கள். அந்த நாளில் கயிறு முறுக்குவர். புளிச்சை நார்க்கயிறு கட்டில் பின்னுவதற்கும் இதர பல உபயோகங்களுக்கும் பயன்பட்டது. நான் அதிகாலையில் எழுந்து, ஏரிப்பக்கம் போவேன். ஏரியில் தண்ணிர் கிடந்தால் அதில் குளிப்பேன். ஏரி வற்றிக்கிடந்த சமயங்களில், வயல் வயலாக அலைந்து, ஆள் இல்லாத வசதியான கிணறாகப் பார்த்து, குளித்து விட்டுத் திரும்புவேன். துறையூரில் ஒட்டல்கள் பல இருந்தன. சாப்பாட்டு வசதிக்குக் குறைவில்லை. சிறிது காலம், ரெட்டியாருக்கு அலுவலகத்துக்கு வீட்டிலிருந்து கொண்ட வரப்பட்ட சாப்பாட்டில் எனக்கும் சேர்த்து வந்தது. வீட்டில் சவுகரியப்படாது போனதும், நல்ல ஒட்டல் ஒன்றில் மாதச் சாப்பாட்டுக்கு ரெட்டியாரே பேசி ஏற்பாடு செய்தார். என்றும் உணவு விஷயம் எனக்கு ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. அதே மாதிரித்தான் தங்குமிடமும், அனைத்து விதங்களையும் அனுசரித்து திருப்தி அடையக் கற்றிருந்தது என் மனம், மாலை வேளையில் ஏரிக்கரை மீது தனியாக வெகு தூரம் நடந்து திரும்புவதை வழக்கமாக்கினேன். அமைதியான சூழ்நிை இயற்கை அழகு கொலுவிருந்த பிரதேசம். எனவே, மாலை உன் மனசுக்கு நலமாக இருந்தது. ‘கிராம ஊழியன்’ மறுமலர்ச்சி இலக்கிய இதழாக மாற்றப்பட்ட பிறகு, ஒரு வருட காலம் சிறிய அளவு (கிரவுன்சைஸ்) பத்திரிகையாக வெளிவந்தது. 1944 ஏப்ரல் முதல் அதைப் பெரிய அளவில் (டெம்மி சைஸ்- ஆனந்த விகடன் மாதிரி) கொண்டு வருவது என்று திட்டமிடப்பட்டது. கு.ப. ராஜகோபாலன் கும்பகோணத்தில் தங்கியவாறே ஊழியனுக்கு அதிகமான விஷயங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். கதை, கட்டுரை, நாடகம், வரலாறு (மகாராஷ்டிர வீரன் சத்ரபதி சிவாஜியின் கதை) என்று பலவகைப்பட்டவை அவை. கு.ப.ரா, கரிச்சான், பரத்வாஜன் போன்ற பல பெயர்களில் அவர் அவற்றை எழுதினார். ஏனோ அவர் கிராம ஊழியன் இதழில் வசனகவிதை எதுவும் எழுதவில்லை. ஆனால் கலாமோகினி'யில் அவருடைய கவிதைகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.