பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x 139 வருடங்கள் பல ஒடியும் என் சிறுகதைத் தொகுப்பு 'பட்டாசுக்கட்டு’ வெளிவரவேயில்லை. 'தமிழ்நாட்டுச் சிறுகதைகள் பட்டியலில் பட்டாசுக்கட்டு பெயர் காணப்பட்ட போதிலும், கடைசி வரை அந்தத் தொகுப்பு வரவில்லை. துறையூரில் 'பாரதமாதா பிரசுரம்’ என்றொரு பதிப்பகம் இருந்தது. கருப்பையா என்பவர் சிறுஅளவில் அதை நடத்திக் கொண்டிருந்தார். இந்திரா பத்திரிகையின் ஆசிரியர் பநீலகண்டன் எழுதிய கம்பராமாயணம் கட்டுரைகளை, கோசலைச் செல்வன் ‘மிதிலைச் செல்வி’ என இரண்டு புத்தகங்களாக வெளியிட்டிருந்தார். சிரஞ்சீவி என்ற எழுத்தாளரின் கதை களையும், வேறு சில நூல்ளையும் அவர் பிரசுரித்திருந்தார் நான் திருநெல்வேலியில் இருந்தபோதே அவருக்குக் கடிதம் எழுதி என் கதைகளைப் புத்தகமாக வெளியிட இயலுமா என்று கேட்டிருந்தேன். அவர் இசைவு தெரிவித்து, கதைகளை அனுப்பிவைக்கச் சொன்னார். பன்னிரண்டு கதைகள் அனுப்பினேன். அணையா விளக்கு என்று பெயர் வைக்கலாம் என்று தெரிவித்தேன். அந்தப் பெயரில் ஒரு கதை அதில் இருந்தது. எனினும் அந்த விளக்கு ஏற்றப்படவே இல்லை! நான் துறையூர் சேர்ந்ததும், பாரதா மாதா பிரசுரம் கருப்பையாவைச் சந்தித்தேன். என் கதைகள் பற்றி விசாரித்தேன். 'கண்டிப்பாக உங்கள் கதைகளை புத்தகமாக வெளியிடுவேன். இப்ப கொஞ்சம் பணக் கஷ்டம். பொருளாதார நிலைமை சீர்பட்டதும், முதலாவதாக அணையாக விளக்கை அச்சாக்குவேன் என்று அவர் உறுதி கூறினார். அவர் வசதிகள் அதிகம் இல்லாத எளிய மனிதர். புத்தகக் கடை வைத்து, பலவிதமான புத்தகங்களையும் விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் புதிய நூல்களை வெளியிடலாமே என்று ஆசைப்பட்டு பதிப்புவேலையிலும் முனைந்தார். புத்தகங்கள் விற்பனையாகவில்லை. அவருடைய பொருளாதார நிலையும் சரிப்படவில்லை. அவருடைய நிலைமையை புரிந்துகொண்டு நான் என்னுடைய கதைப்பிரதிகளை திரும்பப் பெற்றேன். காலம் வரும் என்று காத்திருந்தேன். கோயம்புத்துாரில் சினிமா உலகம் பத்திரிகையைக் கவனித்து வந்த எஸ்.பி.கிருஷ்ணன். ஆசிரியர் பி.எஸ்செட்டியாரின் உறவினர். ‘ஏதாவது பிசினஸ் பண்ணனும் என்று ஆசைப்பட்டார். சிறுகடை ஒன்று வைத்திருந்த நண்பர் ஒருவர் அவருடன் கூட்டுச் சேர்ந்தார்.