பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 & நிலைபெற்ற நினைவுகள் திருலோக சீதாராமும், ரெட்டியாரும் அந்த யோசனையை ஏற்றுச் செயலாற்றினார்கள். கு.ப.ராவுக்கு மாதம் தோறும் ஐம்பது ரூபாய் சன்மானம் அளிக்க லிமிட்டெட் நிறுவனம் முன்வந்தது. கு.ப.ரா, தமக்கிருந்த இலக்கிய ஆர்வத்தினாலும், சோதனை ரீதியான தமது படைப்புகள் அச்சில் வர வாய்ப்பு ஏற்படுகிறதே என்ற உற்சாகத்தினாலும், தமது பத்திரிகைப் பணி சன்மானம் தேவையில்லை என்று தாராள மனசுடன் மறுத்தார் அவர் கும்பகோணத்தில் தங்கியிருந்தவாறே கதை, கட்டுரை, ஒரங்க நாடகம் என்று பத்திரிகைக்கான விஷயங்கள் பலவற்றையும் அனுப்பினார். மற்றும் கும்பகோணம் எழுத்தாளர்கள் சிலரிடமிருந்தும் படைப்புகள் பெற்று ஊழியனுக்கு அனுப்பி உதவினார். கு.ப.ரா எனக்குப் பணம் வேண்டாம் என்று மறுத்திருந்த போதிலும், ஊழியன் நிர்வாகம் அவருக்கு மாதம்தோறும் ஐம்பது ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தது. ஆறுமாதங்களுக்குப் பிறகு கு.ப.ராபெயரை 'ஆசிரியர் என்றும், திருலோக சீதாராம் பெயரை ‘நிர்வாக ஆசிரியர்’ என்றும் அச்சிடலானார்கள். அது முதல் கு.ப.ராவுக்கு நிர்வாகம் நூறு ரூபாய் வழங்கியது. அந்நிலையில்தான் கு.ப.ரா.வும் திருலோகமும் சென்னை வந்திருந்தார்கள். அவர்கள் வந்த பின்னர்தான் சக்திதாசன் சுப்பிரமணியன் இலங்கை சென்றார். இவ்விவரங்கள் அனைத்தையும் திருல்ோகம் எனக்குச் சொன்னார். கிராம ஊழியன் இலக்கிய இதழை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்கு நீங்கள் துறையூருக்கு வந்தால் உதவியாக இருக்கும். நீங்கள் துறையூரிலேயே இருந்து பத்திரிகையைக் கவனித்துக் கொண்டால், நான் வெளியூர்களில் சுற்றி விளம்பரங்கள் சேகரிக்கவும், விற்பனையை அதிகப்படுத்தவும் வசதியாக இருக்கும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். 'நவசக்தி பொருளாதார பலம் இல்லாது சிரமப்படுகிறது. சக்திதாசனிடம் பணம் கிடையாது. அவருடன் சேர்ந்திருக்கிற ராதாமணி அம்மா தான் பணம் கொடுத்து உதவுகிறார். பத்திரிகை வளர்ச்சிக்காக நிதி சேகரித்து வரும் நோக்கத்துடன்தான் சக்திதாசன் இலங்கை போயிருக்கிறார். ஓரளவு நிதி அவருக்குக் கிடைக்கக் கூடும். ஆனால் அதை வைத்துக் கொண்டு எத்தனை காலத்துக்கு அவர் பத்திரிகை நடத்தமுடியும் என்றும் திருலோகம் குறிப்பிட்டார்.