பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

லுக்கு வரவில்லை !' என்று டிக்கெட்டு விற்பவன் கூறிவிட்டான். பிறகு ஹாரிஸ் ஓசைப்படாமல் மெது வாக டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான். கப்பலிலே ஹாரி கானடா நாட்டின் ஸ்திரீயுடன் ஓர் அறையில் இருந்துகொண்டான். ஹாரிஸும் எலிஸாவும் வேறு அறையில் அமர்ந்து கொண்டனர். கதிரவன் நன்ருக ஒளி வீசிக் கொண்டிருங்தான். மணி அடிக்கப்பட்டது. கப்பல் புறப்பட்டு, நீல கிறமான ஏரியில் வேகமாகச் சென்றுகொண்டிருங் தது. அந்த ஏரிதான் கானடாவின் எல்லே. அதைக் கடந்துவிட்டால், மனிதனே மனிதன் அடிமைப்படுத்த முடியாது ! o கானடாவை அடைந்ததும் ஹாரிஸும், எலிஸா வும் அடைந்த இன் பத்திற்கு அளவேயில்லே. அவர் களுக்கு வீடில்லை, வாசலில்லை, தொழிலில்லே, பணமு மில்லை ஆனல் சுதந்தரம் கிடைத்துவிட்டது என்று அவர்கள் ஆனந்தமடைந்து இறைவனைத் தொழு தார்கள். கானடாவிலிருந்த குவேக்கர்களாகிய நண்பர்கள் சிலர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய முன் வந்தனர். ஹாரிஸுக்கு வேலையும், அவன் குடும்பத்தார் தங்கியிருக்க வீடும் கிடைக்க அவர்கள் ஏற்பாடு செய்தனர். விடுதலை, விடுதலை, விடுதலே ' என்ற உணர்ச்சியுடன் அவர்கள் இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

| || ||

105