பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எலிஸா தன் அறைக்குத் திரும்பும்பொழுது, யசமான ரும் அவர் மனைவியும் பேசிக் கொண்டிருந்தது அவl காதில் பட்டது. அதிலிருந்து தன் குழந்தையையும் டாம் மாமாவையும் யசமானர் விற்றுவிட்டார் என் பதை அவள் தெரிந்துகொண்டாள். உடனே அங் கிருந்து அவள் தன் அறைக்குச் சென்று, அங்கே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையை எழுப்பிளுள். 'ஹாரி! நாம் உடனே இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் ! நீ சப்தமே போடக் கூடாது. அம்மா சொன்னபடி கேட்க வேண்டும். யச மானர் உன்னைக் கைவிட்டு விட்டார். ஆனால் உன் னுடைய தாயாகிய நான் உன்னைக் கைவிடுவேனா? என்று சொல்லிக் கொண்டே, அவனுக்குப் புதுச் சட்டை அணிவித்து, ஒரு போர்வையும் போர்த்தி அவனை உட்கார வைத்தாள். அறையிலிருந்த ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில் நன்றியறிதலோடு யசமானி அம்மாளுக்குச் சில வரிகள் எழுதி வைத் தாள். பிறகு சட்டென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அவள் நேராக டாம் மாமாவின் குடிசையை கோக்கிச் சென்ருள்.

அங்கே டாமிடமும் அத்தையிடமும் தான் கேள் விப்பட்ட விஷயத்தைச் சுருக்கமாய்ச் சொன் னாள். 'நான் ஓடிச் செல்லப் போகிறேன். என் குழந்தையை நான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் மாமா, உன்னையும் விற்று விட்டதால், நீயும் என்னோடு வந்து விடு' என்று அவள் ஆவேசத்துடன் கூறினுள். இச் செய்தியைக் கேட்ட இருவரும் சிறிது நேரம் அப் படியே திகைத்து கின்றனர். எலிஸாவின் பேச்சை அவர்கள் அப்படியே நம்பினர்.

13