பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று மணி நேரம் சாலையிலே நெடுங்துாரம் ஓடிய பிறகு, அவர்கள் குதிரைகளைப் பிடித்துக்கொண்டு வீடு திரும்பிவந்தனர். ஹேலி உடனே தாங்கள் கிளம்பிச் செல்லவேண்டுமென்று கூறினான். அவனுக் குக் கோபமும் எரிச்சலும் தாங்க முடியாமல் இருங் தன. 'இப்பொழுதே மூன்றுமணி நேரம் பாழாகிவிட்டது!’ என்று அவன் வருக்தின்ை. குதிரைகளைத் தேய்த்துவிட வேண்டுமென்றும், அவைகளுக்குச் சிறிதுநேரம் ஓய்வு கொடுக்க வேண்டுமென்றும் ஸாம் கூறினன். அந்த நேரத்தில் சாளரத்தின் வழியாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த திருமதி ஷெல்பி, அங்கே வந்து, ஹேலி சாப்பிட்டுவிட்டுப் போகவேண்டு மென்றும், குளோ அத்தை விரைவிலே சமையலை முடித்துவிடுவாள் என்றும் கூறினுள். அதனுல் ஹேலி அவளுடன் வீட்டுக்குள்ளே சென்ருன், குதிரைகள் லாயத்திற்குக் கொண்டு போகப் பட்டன. அப்பொழுது ஸாமும் ஆண்டியும் மிகுந்த மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டார்கள். யசமானி அம்மாளின் கோக்கப்படியே நாம் செய்துவிட்டோம். அவர்களுக்கு மிகுந்த சங்தோஷமாயிருக்கும்!” என்ருன் ஆண்டி. ஆம், இதற்குள் எலிஸா வெகுதுாரம் போயிருப்பாள். இன்னும் காம் சில தந்திரங்கள் செய் தால், அவளைப் பிடிக்கமுடியாமலே தடுத்துவிடலாம்" என்று ஸாம் சிரித்துக்கொண்டே சொன்ஞன். இரு வரும் வீட்டை நோக்கித் திரும்பினர். இன்று நமக்கு நல்ல விருந்து கிடைக்கும் ' என்று பேசிக்கொண்டே அவர்கள் சமையலறையை காடிச் சென்றனர். சாப்பாட்டிற்குப் பிறகு இரண்டு மணிக்கு ஹேலி யும் இரண்டு நீகிரோவர்களும் குதிரைகளின்மீது

18

18