பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏறிக்கொண்டு, எலிஸாவைத் தேடுவதற்காகப் புறப் பட்டுச் சென்றனர். சிறிது தூரம் சென்றபின், சாலை இரண்டு பிரிவாகப் பிரிந்து காணப்பட்டது. ஒரு பாதை கல்லும் சரளையும் பரப்பி நல்ல ரஸ்தாவாக இருந்தது. மற்றது வெறும் மண்ணுல் அமைந்ததாக இருந்தது. அவர்கள் எந்தப் பாதையில் செல்வது என்று ஆலோசிக்கத் தொடங்கினார்கள். மண் பாதையே நல்லது. அதில் ஆள் நடமாட்டம் குறைவு. அந்த வழியாகத்தான் எலிஸா போயிருப்பாள்' என்று ஸாம் கூறினன். அதுதான் சரியென்று ஹேலியும் ஒப்புக்கொண்டான்.

ஆளுல் அவர்கள் ஒரு மணி நேரம் சவாரி செய்து கொண்டு சென்றதில், பாதை குறுக்கே அடைக்கப் பட்டிருந்ததைக் கண்டனர். அப்பொழுது ஹேலி மிகுந்த கோபமுற்று, இங்கே மேற்கொண்டு பாதை இல்லை என்பது உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். வேண்டுமென்றே என்னை ஏமாற்றிவிட்டீர்கள் ! உங்க ளுடைய நீகிரோ வேலையை என்னிடமே காட்டிவிட் டீர்கள் ' என்று உரக்கக் கத்தினான். ஸாம், அப்படி யொன்றுமில்லை. சுருக்கமான பாதையில் அவளை எட்டிப் பிடித்துவிடலாம் என்றுதான் எண்ணினேன்’ என்ருன். மூவரும் அங்கிருந்து வந்தவழியே திரும் பிச் சென்று, சரளை பரப்பியிருந்த ரஸ்தாவில் குதிரை களை ஓட்டிக்கொண்டு சென்றனர்.

19

19