பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. தாயும் சேயும்

டாம் மாமாவின் குடிசையைவிட்டு வெளியேறிய பின், எலிஸா தன் நிலைமையைப் பற்றிச் சிந்தனை செய்து வருங்தினாள். இந்தப் பரந்த உலகிலே தான் ஆதரவற்றுத் தனியே தவிப்பதாக எண்ணினாள். பலமுறை ஆண்டவனைத் தொழுதாள். ஹாரியை அவள் நடத்தியே கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்; ஆளுல் அவனைக் கீழே விடுவதற்குக்கூட அவளுக்கு மனமில்லை. அவனும் தாயை அன்போடு பற்றிக் கொண்டிருந்தான்.

கடந்து கடந்து, அவள் கென்டக்கியிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டாள். பொழுதும் புலர்ந்தது. மேலும் கடந்துகொண்டே சென்று, எப்படியும் ஒஹியோ நதியைக் கடந்துவிட்டால், தன்னை எவரும் பிடிக்கமுடியாது என்று அவள் கருதியிருந்தாள். அந்த ஆற்றுக்கு வடக்கே அடிமைகளை எவனும் தாளு கப் போய்ப் பிடிக்கமுடியாது. அங்கே அடிமை வியா பாரமும் இல்லை. அதனுல்தான் எலிஸா ஆற்றைக் கடந்துவிட வேண்டுமென்று ஆத்திரத்தோடு நடந்து கொண்டேயிருந்தாள். பகலில் அவள் பையனைக் கீழே இறக்கி நடத்திக் கடட்டிக்கொண்டு போனாள். கண்பகலில் அவள் ஒரு கடையில் பலகாரங்கள்வாங்கி, தானும் உண்டு, குழந்தைக்கும் கொடுத் தாள். அங்கேயே சிறிதுநேரம் ஓய்வெடுத்துக்கொண்டாள்.

மீண்டும் நடந்துசென்று, சூரியன் மேல்திசையில்

20

20