பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலந்து கொண்டு, உங்களுக்கு நல்ல ஏற்பாடு செய் கிறேன்! நீ எங்கே செல்ல விரும்புகிருய்' என்று அவள் கேட்டாள்.

'கானடாவுக்கு !'

     'நீ நினைப்பதுபோல், கானடா அவ்வளவு அருகில் இல்லை!'

இந்தப் பேச்சுக்குப் பின்னல், கணவரும் மனை வி யும் வீட்டுக் கூடத்தில் அமர்ந்து வெகுநேரம் ஆலோ சனை செய்தனர். அடிமை வியாபாரி மறுநாளே தங்கள் வீட்டில் வந்து நிற்பான் என்றும், அன்றிரவே எலிஸாவையும் குழங்தையையும் பாதுகாப்பான ஓரி டத்தில் கொண்டுபோய் விடவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அப்படி எந்த இடம் இருக்கிறது என்று மனைவி கேட்டாள். ஏழு மைல்களுக்கு அப்பால், ஒரு வனத்தில் டுரோம்ப் என்ற ஒரு நண்பர் இருப்பதாயும், அவர் அடிமைகளுக்கு ஆதரவானவர் என்றும் பர்ட் கூறினார்.

சட்டம் எப்படியிருந்த போதிலும் தன் கணவர் இரக்கத்தோடு கடந்துகொள்வதைக் கண்டு திருமதி பர்ட் மகிழ்ச்சி அடைந்தாள். உடனே அங்கிருந்து எழுந்து சென்று தன் அலமாரியைத் திறந்து, இறந்து போன தன் பையனின் சட்டைகள், கால் சட்டைகளை வெளியே எடுத்தாள். அப்போது அந்தத் துணிகளைப் பார்த்ததில், அவளால் தன் கண்ணிரை அடக்கிக் கொள்ள முடியவில்லை. அவள் ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டு, தன்னுடைய பழைய உடை மூன் றையும் எடுத்துக் கொ ண் டு, சமையலறைக்கு: சென்றாள்.

தான் கொண்டுசென்ற உடைகளை அவன்

29