பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. விடுதலை பெற்ற வீரன்

டுரோம்பின் உதவியால் எலிஸாவுக்கு ஒரு நல்ல வீடு கிடைத்தது. அந்த வீட்டில் சுமார் ஐம்பது, அறுபது வயதுடைய ராக்கேல் என்ற ஒரு கிழவி இருந் தாள். அவள் எலிஸாவுக்கு வேண்டிய உதவிகளை அன்புடன் செய்துவந்தாள். சிமியோன் என்பவர் அவளுடைய கணவர். தப்பி யோடிவரும் நீகிரோ மக்களை ஆதரித்து, அவர்களை ஊரூராக அழைத்துச் சென் று, கடைசியாகக் கானடாவில் கொண்டு போய்ச் சேர்ப்பது அவர் வழக்கம். அவரும் அவ ருடைய குடும்பத்தாரும் கிறிஸ்தவர்களில் 'குவேக்கர்’ வகுப்பைச் சேர்ந்தவர்கள். குவேக்கர்கள் ஜீவகா ருண்யமுள்ளவர்கள். கொலை, பலாத்காரம் முதலிய வற்றை அவர்கள் வெறுத்து வந்தார்கள். எந்தக் கார ணத்தினுலும் அவர்கள் யுத்தத்தில் சேரமாட்டார்கள்.

எலிஸா ஒரு நாற்காலியில் அமர்ந்து தையல் வேலை செய்துகொண்டிருந்தாள். அவள் அருகில் இருந்த ராக்கேல் அம்மாள், ! நீ கானடாவுக்குத்தான் போகப் போகிருயா?’ என்று கேட்டாள்.

ஆமாம்; அங்கே சென்றால்தான் எங்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்."

! அங்கே நீ என்ன தொழில் செய்யப்போகிறாய்?

                                                                       39