பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயத்தில் கென்டக்கியில் அவன் விட்டுவந்த மனைவி' குழங்தைகளைப் பற்றிய நினைவும் அவனுக்கு ஏற் பட்டது. ஈவா அவனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண் டிருந்தாள். ஏராளமான பூக்களைப் பறித்துவந்து, அவனுடைய சட்டையில் பொத்தான்களின் துவாரங் களில் அவைகளை அவள் மாட்டிவிட்டாள். ரோஜா மலர்களே மாலையாகக் கட்டி அவன் கழுத்திலே அணி வித்து, அவள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருங் ሪክ " கள் . 10. டாமும் ஈவாவும் அகஸ்டினின் மாளிகையில் டாமுக்கு அளிக்கப் பட்டிருந்த அறை சுத்தமாகவும், வசதியாகவும் இருங் தது. அங்கே ஒரு மேசையும், காற்காலியும், கட்டி லும் இருந்தன. மேசைமீது ஒரு வேதப்புத்தகமும் இருந்தது. டாமிடம் ஈவாவுக்கு அன்பு வளர்ந்துகொண்டே வந்தது. அவனும், இமைகள் கண்ணைக் காப்பது போல், அவளைக் கவனித்துவந்தான். அவர்கள் இருவ ரும் ககமும் சதையும்போல் இருப்பதைக் கண்ட அகஸ் டின் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். டாமுடன் பழகுவ தால் ஈவாவுக்கு நன்மையே விளையும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஒரு நாள் டாம் தன் மனைவிக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று எண்ணினன். ஈவாவிடம் சென்று

W. W.

53