பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒபீலியா ஓரளவு தைரியத்துடன் பேசினுள் : உன் கணவருடைய கடைசி வாக்குறுதி அது. அதை நிறைவேற்ற வேண்டியது உனது கடமை. ஈவாவும் மூச்சு இருக்கும்வரை அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.' * உடனே மேரி, தன் கைக்குட்டையை எடுத்து வைத்துக்கொண்டு அழத்தொடங்கினுள். என்னிடத் தில் ஒருவருக்கும் இரக்கமில்லை. எல்லோரும் எனக்கு விரோதமாகவே பேசுகின்றனர். என் ஒரே மகளும் போய்விட்டாள். என் விருப்பமறிந்து நடக்கும் கண வரும் இறந்து போளுர் எனக்கு ஆதரவானவர் ஒரு வருமில்லையே' என்று கூச்சலிடத் தொடங்கிளுள். அவள், தலைவலி உண்டாகிவிட்டது என்று சொன் ள்ை. மம்மியை அழைத்து, சாளரத்தைத் திறந்து விடும்படி சொன்னுள். ஒரே சமயத்தில் தனக்குப் பல வேதனைகள் ஏற்பட்டுவிட்டதுபோல் அவள் கடந்து கொண்டாள். மேற்கொண்டு அவளிடம் பேசிப் பயனில்லை என்று கருதி, ஒபீலியா திரும்பிச் சென்றுவிட்டாள் ஆளுல் டாமுக்காக ஏதாவது உதவி செய்ய வேண்டு மென்று அவள் விரும்பினள். கென்டக்கியிலுள்ள திருமதி ஷெல்பிக்கு அவள் ஒரு கடிதம் எழுதினுள். அதில் டாமின் நிலைமையைப் பற்றியும், விரைவில் அவனுக்கு ஏற்படக்ககூடிய அபாயத்தைப் பற்றியும் குறிப்பிட்டு, உடனே பணம் அனுப்பி அவனை விலைக்கு வாங்கிச் செல்ல வேண்டுமென்று அவள் எழுதியிருங் தாள். - * i. * ஆளுல் மறுகாளே டாமும் மற்றும் ஆறு அடிமை களும் ஏலத்தில் விற்கப்படுவதற்காக ஓர் அடிமைக்

76

76