பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா



4
இளமைக்கு எதிரிகள்

ஏன் முதுமையடைகிறோம்? எப்படி இளமை போய்விடுகிறது? எதனால் இந்த மாற்றங்கள்? ஏன் ஏற்படுகின்ற இந்த தடுமாற்றங்கள்? மனமாற்றங்கள் என்ற கேள்விகள், புற்றிலிருந்து புறப்பட்டுப் பறக்கின்ற ஈசல்கள் போல நமக்குள்ளிருந்து கிளம்பிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஈசலைப் பிடிக்கக் காத்திருக்கும் காக்கையின் சுறுசுறுப்பு போல, நாமும் சுறுசுறுப்படைந்து கொள்வோம். ஏனெனில், எண்ணியதைப் பெற இப்பண்பு நமக்கு என்றும் கைகொடுக்கும் காமதேனுவன்றோ!

இளமையாய் இருக்க உதவுவன என்ன என்று அறிவதற்கு முன், இளமையை அழிக்க வரும் எதிரிகளைப் பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

செல்கள்

இளமைக்கு, எதிரிகளில் முதலாவதாக வருவது. நமது செல்கள் பெறுகின்ற மாற்றங்கள் தான். இளமை ஏன்