பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

31


தேய்கிறது. முதுமை ஏன் வந்து மூடுகிறது என்றால், அது செல்களில் ஏற்படுகின்ற விந்தையான மாற்றங்கள் தான்.

இந்த செல்கள் தான் உடலுக்கு ஆதாரமான அடிப்படைகள். செல்கள் வளர்ந்து, பிரிந்து பிரிந்து வளர்வதால்தான் உடலுறுப்புக்கள் உருவாகி, மெருகேறி, வளம் கூடி வாழ்கின்றன. இந்த செல்களை ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்து சோதனை செய்தபோதுதான். வயதாகும் மர்மம் புரிந்தது என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள்.

செல்கள் இயற்கையாகவே வளர்கின்றன. ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, நான்கு எட்டாக இப்படியாகிப் பிறந்து பிரிந்து, வளர்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, செல்கள் வளராமல், பிரியாமல் நின்றுவிடுகின்றன. ஏனென்றால், பிளந்து நின்றுபோய் விடுகின்றன. ஏனென்றால் பிறந்து வரும் சக்தியை அவைகள் இழந்து போகின்றன. இந்த நின்று போகும் இழந்துபோகும் சக்திதான் முதுமையின் ஆரம்பம் என்று நாம் அறிந்து கொள்வோம்.

செல்கள் பிரிந்து வளராமல் இருப்பதற்கும் முதுமைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். அங்கே தான் அந்த அதிசயமான ரகசியம் அமிழ்ந்து போய் கிடந்து, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது.

செல்கள் இந்த சக்தியை இழப்பதனால், உழைப்பினால் மற்றும் பல காரணங்களால் அழிந்துபடுகின்ற செல்களை பழுதுபார்த்து விடவோ, புதுப்பித்து விடவோ முடியாமல் போகிறது. தேய்ந்த செல்கள் தேர்ச்சி பெறா விட்டால், அழிவடைந்த செல்களுக்குப் பதிலாக ஆக்கபூர்வமான புதிய செல்கள் தோன்றாவிட்டால், உடல் நிலை என்ன ஆகும்?

உண்டியலில் காசுகள் போடாமல், உள்ளிருந்த காசுகளை எடுத்துக் கொண்டே வந்தால் உண்டியல் நிலை