பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வழலாம்

33


தவறுக்குள்ளான செல்களின் தடுமாற்றத்தால் தான் முதுமை வருகின்றது என்று ஒரு முடிவுக்கு வல்லுநர்கள் வந்திருக்கின்றார்கள். இது ஒருகாரணம் தான். இதுவே காரணமல்ல - இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

செல்களின் செயல் மாற்றமும், செய்யும் தவறுகளால் தாக்கப்பட்டத் தடுமாற்றமும் தான் உடல் முதிர்ச்சிக்குக் காரணம் என்ற ஒரு காரணத்தை முன் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். இது மட்டும் காரணமா என்றால், இன்னும் இருக்கின்றன. அவற்றையும் அறிந்து கொண்டு, அகற்றி விடுவோமானால் அல்லது அந்த சூழ்நிலையிலிருந்து அகன்று கொள்வோமானால், விரைந்தோடி மறைகின்ற இளமையை எளிதாகத் தக்க வைத்துக் கொள்ளலாம் இளமையாய் வாழலாம்.

நெருக்கடிகள்:<
செல்களுக்கு அடுத்த படியாக வருவது வாழ்க்கையின் நெருக்கடிகள் (Stress) நிமிடத்திற்கு நிமிடம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பன நெருக்கடிகள்தாம். இவை வாழ்க்கையின் சகஜமான வாடிக்கையாகும்.

வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள்தான் அதிகம். எதிர்பார்த்தது கிடைக்காமற் போனால் ஏமாற்றங்களே நிறையும். ஏமாற்றங்கள் இதயத்தை நோகடிக்கின்றன. எண்ண எழுச்சிகளை சாகடிக்கின்றன. இவ்வாறு தொடர்கின்ற ஏமாற்றமும் துன்பமும், கவலையும் கலக்கமும், மனிதனது உணர்வுகளைத் தாக்கும் நெருக்கடிகளாகவே நிறைந்து போகின்றன.

இந்த நெருக்கடிகளும் நேர்முகத் தாக்குதல்களும் வாழ்க்கையில் ஆண்களுக்குத் தான் அதிகம். பெண்களுக்கு சற்றுக் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள்