பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

87


முதியவர்களுக்குத் தேவை உடல் ஓய்வு மட்டுமல்ல. முறுக்கியெடுக்கின்ற முற்றாத மனத்தை அடக்கி வைக்கின்ற மன ஓய்வும் தான்.

படுக்கப் போகுமுன், இதமான சூடுள்ள பாலை அருந்தலாம். அல்லது நல்ல வெந்நீர் குளியல் போட்டுவிட்டு வந்தால், சுகமான உறக்கம் வரும்.

ஆகவே, தூக்கமின்மையை ஒரு நோயாக வளர்த்துக் கொண்டு, இரவில் தம்மையறியாமல் நடந்து போகும் போது கொடுமையான வியாதிக் குழியில் விழுந்துவிட வேண்டாம். எனவே, நல்ல உறக்கத்தை வளர்க்கும் நல்ல பழக்கங்களை முதியவர்கள் வளர்த்துக் கொள்வது நல்ல தற்காப்பாகும்.

இவற்றை ஏன் குறிப்பிடுகிறோம். என்றால், முதியவர்களுக்கு ஏன் நோய் வருகிறது? எப்படி உண்டாகிறது? இவற்றை முறியடிக்கும் முறைகள் என்னென்ன என்றெல்லாம் அறிந்து கொண்டு ஓர் ஆரோக்கியமான வாழ்வை வாழத்தான்.

காரணம் காரியத்திற்கே

இளமையான ஒருவருக்கு முழங்காலில் மூட்டுப் பிடி (Rheumatism) மிகுந்த வலிமையோடு வருகிறது என்றால், கடுமையான உடற்பயிற்சி செய்யும் போதும், தேவையான மருந்தை உண்ணும்போது எளிதாக வலிபோய் விடுகிறது.

வயதானவருக்கு வலி வரும்போது, உடலில் வலிமையில்லாததால், உயிர்க்காற்று போதிய அளவு இழுக்கப்படாததால், சிறந்த நிவாரணம் பெற முடியாமலே தேகம் தவிக்கிறது.

உறுப்புகள் நலிவு பெறும் போது, அதற்குரியவரின் உடல் வலிமையும் உள்ள வலிமையும் தான் மிகுதியாகக் கைகொடுத்துக் காப்பாற்றுகிறது. முதியவர்கள்