பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


இயக்கத்தில் இருக்கும்பொழுது நடைபெறக்கூடிய இயல்பான காரியமாகும்.

ஒரு மனிதன் ஓய்வு எடுக்கும்பொழுது அல்லது உறங்கும் பொழுது, மூச்சு இழுப்பதும் மூச்சு விடுவதும் உதரவிதானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சீராக நடைபெறுகிறது. இவ்வாறு பொதுவான மூச்சிழுப்பும் வெளிவிடுவதும் 1 நிமிடத்திற்கு 4 முதல் 20 வரை இருக்கும் என்றும், அது சராசரியாக 17 முறை இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கின்றனர்.

ஆக, ஓய்வு நேரத்தில் எல்லா மனிதர்களும் சராசரியாக ஒரு அளவுதான் சுவாசம் மேற்கொள்வதில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனால், மனிதர்கள் மும்முரமான செயல்களில் ஈடுபட்டிருக்கும்பொழுது, அதிகமான மூச்சிழுப்பிலும் வெளிவிடுவதிலும் தம்மையறியாமலே செயல்படுகின்றனர். அது இரண்டு நிலைப்படுகிறது.

ஒன்று: நுரையீரல் அதிகமாக விரிந்து அதிகமான பிராண வாயுவைப் பெறுவதற்கு மார்பின் விலா எலும்புகள் மேற்புறமாக விரிந்து கொடுப்பது.

இரண்டு: அந்த விலா எலும்புத் தசைகள் மீண்டும் உட்புறமாக சுருங்கிவரச் செய்வது.

ஒருவர் உடற் பயிற்சி செய்பவராக இருந்தால், அவருடைய உதரவிதானம், விலா எலும்புக் கூடு மற்றும் தசைகள் அடிக்கடி இயங்கி வலிமை பெறுவதுடன், அதிகமான பிராண வாயுவைப் பெற்றிடும் நுரையிரலுக்காக விரியும் ஆற்றலைப் பெற்றுக்கொள்கின்றன.

அதிகமான வெளிக்காற்று உள்ளே சுவாசிக்கப்படும் பொழுது, அதிகமான பிராண வாயுவை அவற்றிலிருந்து