பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


அதற்காகத்தான், பலகைக்குப் பின்புறம் மிதித்து, தவறுக்குள்ளானாலும் பரவாயில்லை, பலகைக்கு முன் னால் மிதித்தாலும் கவலை இல்லை. எதற்கும் கவலைப் படாமல், ‘ஓடிவருகின்ற முழுவேகத்தோடே தாண்ட வேண்டும். தாண்ட வேண்டியதுதான் உங்கள் கடமை. தயங்குவதோ, தவறு வந்துவிடுமோ என்று மயங்குவதோ கூடாது. அப்படி செய்தால் வேகம் குறையும், தாண்டும் துரம் குறையும்.


ஆகவே ஓடி வரும்போதே பலகையைப் பார்த்துக் கொண்டு ஓடிவந்து, நான்கைந்து காலடிகள் இருக்கும் போதே, பார்வையை பலகையில் இருந்து அகற்றிவிட்டு, முன்னே உள்ளே தாண்டும் மணற் பகுதியைப் பார்த்துத் தாண்டப்பழகவேண்டும்.நீங்கள் இனிசெய்யவேண்டியது.


ஒடத் தொடங்குகிற எல்லையைக் குறித்து, பிறகு அளந்து நினைவில் கொள்க. எப்பொழுது பயிற்சி செய்யத் தொடங்கினாலும், அந்த குறிப்பிலிருந்தே ஒடத் தொடங்கி, முழுவேகத்துடன் வரும்போது, சரியாகப் பலகையை மிதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப் பொழுதுதான் உதைத்து எழும் சக்தி கிடைக்கும். தைரிய மும் கிடைக்கும்.


2. உதைத்து எழுதல் : (Take-off). இயல்பாக ஓடிவரும் காலடிக்கு அரை அடி குறைந்த காலடியுடன், பலகையை மிதித்து விடுவது முக்கியமான காரியம் என்று சொன்னோம். மிதிக்கின்ற கால் இடது காலாகவும் இருக்கலாம். வலது காலாகவும் இருக்கலாம். எந்தக் காலைப் பயன்படுத்தினாலும் சரி, முன் பாதமும் குதி காலும் தரையில் இருக்குமாறு முழுமையும் ஊன்றி, பலகையை முழு பலத்துடன் மிதித்து எழும்பவேண்டும்.