பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா D 105


போட்டிநடப்பதற்கு முன்னே ஒரு சில முறைகளைக் கையாள வேண்டுவது இன்றியமையாத ஒன்றாகும்.


வியர்வை வெளிவரும் அளவுக்கு, இதற்குரிய பதமாக்கும் பயிற்சிகள் அனைத்தையும் செய்து, உடலைப் பதமாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, முன்னே பழகிக் கொண்டிருப்பது போல, ஒடிவரும் தூரம் எல்லையை அளந்து, அங்கிருந்து பலமுறை ஒடிப்பார்த்து, பலகையை சரியாக மிதிக்க முடிகிறதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாகப் போனல் துரத்தைக் குறைத்தும், பலகைக்குப் பின்னால் வந்தால், முன்னால் தள்ளி சரியான அளவைக் கொண்டும் போட்டிக்குத் தயாராக இருக்க வேண்டும்.


தாண்டுவதிலேயே முழு கவனமும் இருக்க வேண் டும்.அடுத்தவர்களுடன் சலசலவென்று பேசுவது சக்தியை வீணடிப்பதோடு, அக்கறையில்லாமல் செய்துவிடும்.


மற்றவர்கள் அதிகம் தாண்டினால் அதற்காகக்


கவலைப்படக் கூடாது. தன்னால், தன் முயற்சியால்


அவர்களை மீற முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த் துக் கொள்ள வேண்டும்.


தாண்டுவதற்கான இடைவெளி நேரத்தில், தாண்டு கின்ற காலணியைக் (Spikes) கழட்டி விட வேண்டும். தாண்டுகின்ற சமயத்தில், ஒட்டப்பந்தயத்திற்குப் போகக் கூடிய வாய்ப்பு வந்தால், நீங்கள் மற்றவரைவிட அதிக மாகத் தாண்டியிருந்தால், தாண்டுவதை கொஞ்ச நேரம் மறந்துவிட்டு, ஒட்டத்தில் கலந்து கொண்டு வரலாம்.


ஒவ்வொரு முறை தாண்டப் போகும் பொழுதும், உடல் பதநிலை (Warmup) குறையாமல் இருப்பது நல்லது.