பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 9


தகுதியுள்ள ஒரு வீரமகனை வீராங்கனையை இப்பரந்த நாடு பெற வில்லையா? அல்லது பெற்ற மக்கள் பெற முடியாத இழிநிலையில் இருந்து விட்டார்களா?


உலகப் படத்திலே புள்ளி வடிவத்தில் தோன்றும் நாடுகள் எல்லாம், ஒன்றிரண்டு வெற்றி வீரர்களைத் (Champion) தயார் செய்து அனுப்பித் தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொண்டு போகிறபொழுது, கையகல நாடாக இருக்கும் நம் நாட்டுக்குக் கையாலாகாமலா போய் விட்டது? குறையுள்ள உடல் கொண்டவர்களை விட்டு விடுவோம்! நிறைவான உடலும், நிலையான மனமும் கொண்ட நல்ல மக்கள் இந்நிலையை நினைக்க வேண் டாமா?. நினைத்துப் பார்த்தார்களா?


ஆசிய நாடுகளுக்குள்ளே நடக்கும் போட்டிகளிலே கூட ஒரு சில பதக்கங்களை தான்நம்மால் பெற முடிகிறது என்றால், நாம் விளையாட்டுகளிலே எத்துணை அளவு கீழான நிலையில் இருக்கிறோம் என்பதை எண்ணிப்


பார்க்க வேண்டாமா?


நம்மால் முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். முயற்சி திருவினையாக்கும். தளர்ச்சியடையாத முயற்சி யும், தன்னம்பிக்கையும், தன்னிறைவான உழைப்பும் உறுதியாக வெற்றியை தேடித்தரும். வீர விருதை வாங்கித் தரும். முயன்றோமா நாம்? இல்லையே!


வருங்கால வாலிபர்கள்,"உடலாளர்களாக” (Athlete) மாற வேண்டும். உழைக்கவேண்டும். உலகிலே உயர்ந்த சாதனைகளை (Record) செய்து காட்ட வேண்டும். அமெரிக்க, ரஷ்ய நாட்டு வீரர்களைப்போல, நம் நாட்டு வீரர்களும் அனைத்துப் போட்டியிலும் வெற்றிபெற