பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 117


காரியம் ஆற்றுவது போல, கால்கள் இரண்டும் இயங்கி டலை மேலே உயர்த்தித் தாண்டுகிற ஆற்றலைத் தருவதால், இதை கத்தரிக்கோல் முறை என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.


சாதாரணமாக, மனிதருடைய புவி ஈர்ப்பு சமநிலை சக்தி அவரவரின் தொப்புளை (Navel)ச் சுற்றித்தான் இருக்கும் என்பர். அந்தச் சமநிலை சரிவர இல்லா விட்டால் சரியாக ஒருவர் இயங்க முடியாது. தாண்டும் போது சமநிலை சக்தி ஒரு சீரான நிலையில் இயங்க வேண்டும் அல்லவா! ஒடும் நேரத்திலும், தாண்டும் போதும், எறிகின்ற காலங்களிலும் ஒருவர் சரியாகச் செய்கிறார் என்றால், அவரின் உடல் சமநிலை சக்தியை முழுமையாகப் பயன்படுத்துகிறார் என்றே பொருள்.


உடல் சாயாமல், கீழே விழாமல் இருக்க உதவும் இச்சமநிலை சக்தி (Centre of Balance) கத்தரிக்கோல் தாண்டுமுறையில், குறுக்குக் குச்சிக்கு மேலே 8லிருந்து 12 அங்குலம் உயரம் வரை இருக்கும் என்பர் பயிற்சி வல்லுநர்கள்.