பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 1 1


விரைவிலே அந்நிலை வர வேண்டும், வளர வேண்டும். வீர வித்தினை மாணவர்கள் உள்ளத்திலே ஊன்ற வேண்டும். பெறுகிற வெற்றியின் புகழ் தனி மனிதனுக்கு மட்டுமல்ல, பெற்ற தாய்தந்தையருக்கு மட்டும் அல்ல பிறந்த பொன்னாட்டுக்கும் கிடைக் கிறது என்பதை நினைவுகூர்ந்து “இன்றே செய்க, நன்றே


செய்க”.


இவ்வாறு பயிற்சி தருகின்ற பண்பாளர் (Coach) ஒருவர், தன் முன்னே, அமர்ந்திருக்கின்ற மாணவ, மாணவரிடையே சிறு சொற்பொழிவொன்றை நிகழ்த்


தினார்.


உதய சூரியனின் ஒளி முகம் உலகில் வருவதற்குள், வெற்றி முகம் காண, ஆடுகளம் நோக்கிப் பயிற்சி பெற வந்திருந்த இளம் வீரர்கள், வீராங்கனைகள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, விளையாட்டுடை களான கால் சட்டை, பனியன், காலணி முதலியவற்றுடன் பயிற்சி பெறத் தொடங்கினர்.


உடலைப் பதப்படுத்துகின்ற பக்குவமான பயிற்சி 0.60%m 616burrib (Warming up Exercises) Glflig, Lilp@5, -91s5 தந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு பழக்கம் செய்த பிறகு, எல்லோரும் ஒரிடத்திலும் கூடிய போதுதான், மேற் கண்டவாறு ஒரு சிறப்புச் சொற்பொழிவு தந்தார்.


ஒவ்வொருவர் உள்ளத்திலும் எதிர்காலத்தின் ஏற்றமிகு புகழ்,இனிய பெருமை அத்தனையும் திரைப்படம் போல நிழலாடத் தொடங்கியது. உலக அரங்கிலே நூற்றுக்கணக்கான நாடுகளின் பிரதிநிதியாக வந்திருக்கும் விளையாட்டு வீரர்களான உடலாளர்களின் மத்தியிலே,