பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 129


4. கோலூன்றித் தாண்டல் (Pole Vault)


கோலூன்றித் தாண்டலைப் பற்றிய விளக்கம் தருக:


இந்நிகழ்ச்சி உருவெடுத்த வரலாற்றைக் கேட்டால், இது இங்கிலாந்து மக்களின் அன்றாட வாழ்க்கையி னின்றும் பிறந்தது என்பர். குறுகிய வாய்க்காலை கடந்து செல்ல, பாலமோ மற்ற பாதை வசதிகளோ இல்லாத இடங்களில், கோலினை ஊன்றித் தாண்டி மறு கரையை மக்கள் அடைந்த வழக்கமே மாறி, கோலுான்றித் தாண்டும் நிகழ்ச்சியாக வந்தது என்று பலர் அபிப்ராயப்படுகின்றார் கள். கோலினை (Pole) ஊன்றி ஆற்றின் அகலத்தைத் தாண்டிய செயல், நீளத் தாண்டலாயிற்று, பிறகு நீளத் தாண்டுகிற அமைப்பிலிருந்து உயரே தாண்டும் பேராற் றலைக் கொடுத்தது.


ஆகவே, கோலுடன் ஒடி வருதல், உயரத்தாண்டு தல், கோலினைத் தாண்ட பயன்படுத்துதல் போன்ற முக்கூட்டுச் சக்தியினை வளர்க்கவே இந்நிழழ்ச்சியை செம்மைப்படுத்தி, அதில் போட்டியையும் உண்டாக்கினர்.


கோலூன்றித் தாண்டுவோருக்குரிய தகுதிகள் யாவை?


உயரமான கோலினைத் தூக்கிக் கொண்டு ஓடி வருதல் கோலினை துணையாகக் கொண்டு குறுக்குக் குச்சியைக் கடத்தல் போன்ற அற்புத சாதனையைச்செய்ய, கைத்தசைகளில் நல்ல வலிமை வேண்டும். குறுகிய துரத்திற்குள்ளேயே விரைந்தோடி வரவும், தரையை உதைத்து மேலெழும்புகிற அளவுக்குக் கால்களில் நல்ல சக்தியும் வேண்டும்.