பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


உயரத்திலிருந்து பல முறை கீழே குதிக்க வேண்டி இருப்பதால், அதனால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படு கின்ற அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் நிறைய இருக்க வேண்டும். பலமுறை 12 அடி 13 அடி போன்ற உயரத்தைக் கடக்கப் பழகும்போது அடிபடுமே! மேலிருந்து கீழே பார்த்தால் மயக்கம் வருமே என்று எண்ணுகிற பயந்தாங் கொள்ளிகள் இதில் ஈடுபட முடியாது. நல்ல நெஞ்சுரமும், அஞ்சாத் தன்மையும், ஆண்மையுள்ள நெஞ்சமும் இந்நிகழ்ச்சிக்குத் தேவை. கோலூன்றித் தாண்டலில் நம் நாட்டின் நிலை என்ன?


1896ம் ஆண்டு ஏதென்சில் நடந்த முதல் ஒலிம்பிக் போட்டியில் கோலுரன்றித் தாண்டலின் உயரம் 10 அடி 9% அங்குலம். 1940ம் ஆண்டு வரையிலும் 14 அடி தான் பெரிய உயரம் 7என்று எல்லோராலும் கருதப்பட்டது. 1943ல் வார்மர்டாம் என்பவர் 15 அடியைத் தாண்டினார். அதுவே 11 ஆண்டு காலம் யாராலும் தகர்க்க முடியாத சாதனையாக இருந்தது. அந்த வீரரே தனது 37ம் வயதில் கூட 14.4'தாண்டிக் காட்டினார்.


இன்று உலக சாதனை 6.1 மீட்டரையும் தாண்டி விட்டது.நம் நாடோ இன்னும் 4 அடிக்குக் குறைவாகவே பின் தங்கி இருக்கிறது. ஏன்? வேறு நாட்டிலிருந்து வருபவர்கள் விறுவிறுப்பாகத் தாண்டுகிறார்கள். முதல் இடத்திற்கு மூன்று பேர் ஒரே உயரத்தைத் தாண்ட, அதில் குறைந்த தவறிழைத்தவர் முதலாவதாக வரக் கூடிய சூழ்நிலை இருக்க, நம் நாட்டவரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக் கூடிய தகுதி உயரத்தைக் கூட எட்ட முடியவில்லையே? ஏன் இந்த அவலநிலை? இழிநிலை?