பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


160 [ ] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வேலெறிவதற்குரிய உடலமைப்பு:- எறிபவர் அதிக உயரமாகவும், எடையுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவசியமுமில்லை. உலகிலுள்ள அத்தனை வேலெறிவோர் எல்லாருமே, நடுத்தர உயரமுள்ளவர்கள் தான், 150லிருந்து 200 பவுண்டுவரை எடை உள்ளவர் கள்தான். எனவே, சீரான உயரமும், சிறந்த உடலமைப் பும், வலிமையும், வாளிப்பும், வளமான உறுப்புக்களின் வளைந்து கொடுக்கும் தன்மையும், உடல்மனம் கைகால் கள் இவற்றின் ஒன்றுபட்டுப் பணியாற்றும் பண்புகளின் எழுச்சியும்தான் மிகமிக அவசியம். அதிலும் வலிமை யுள்ள புஜங்கள் உள்ளவர்கள், வேலெறிவதில் நிச்சயமாக வெற்றி பெறமுடியும். வேலினை எறிவதற்கு முன் எவ்வாறு பிடிக்க வேண்டும்?


வேலினை எறிவதற்குமுன், அதனைப் பிடித்துக் கொள்கின்ற விதம் பல விதங்களில் இருக்கின்றன என் றாலும், அவற்றின் முக்கியமான இரண்டு முறைகளை இங்கு காண்போம்.


வேலின் (Javelin) மத்தியிலே, சமநிலைக்காகவும் (Balance) பிடிப்புக்காகவும் (Grip) நூல்சுற்றியிருப்பார்கள் அந்த சமநிலைப் பகுதியின், மேல் பாகத்தில், (இடுப்பருகே உள்ளது) உள்ளங்கையின் உட்பாகத்தை வைத்து, விா களை விரித்து, அதாவது கட்டைவிரல் இடப்புறம் செல்ல வும், சுட்டுவிரல் சமநிலைப் பரப்பின் மேலாக இருக்கவும் மற்ற மூன்று விரல்களும் வலப்புறம் சென்று வேலியை உறுதியாகப் பிடித்திருக்கவேண்டும். அப்பொழுதுவே அக்குள் அருகேயிருந்து நீண்டு மார்புக்கு முன்ன்ே நீண்டிருக்க வேண்டும்.