பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 169


தான். கூர்முனை கீழே குத்தினால் தான் எறியை, “சரியானது” என்று அதிகாரிகள் ஒத்துக்கொள்வார்கள். கூர்முனை தரையில் குத்தாது நீங்கள் எவ்வளவுதுரம் எறிந்தாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆகவே, 20 அடிதுரத்திற்குள்ளாகவே வேலினை எறிந்து, கூர்முனையைக் குத்தச் செய்து, பிறகு கொஞ்சங் கொஞ்சமாக தூரத்தை விரிவுபடுத்துக


குறுக்குக் காலடியை மேலே கூறிய எண்ணிக்கை யுடன் பழகுக.


சாட்டையை அடிக்கக் கையினால் சொடுக்குவது


போல் தான் எறியும் முறையும். ஆகவே ஓடிவரும் முழு வேகத்தையும் தடை செய்யாமல், எறியப் பழகுக.


4. சங்கிலிக் குண்டு வீசி எறிதல்


- (Hammer Throw)


சங்கிலிக் குண்டு வீசி எறிதல் என்றால் என்ன என்பதை விளக்கி, அதை எறியக் கூடிய உடலாளருக்குரிய தகுதிகளைக் கூறுக?


கையினால் குண்டினைத் தள்ளி எறிதல், குண்டு எறிதல் (Shot Put) என்கிறோம். அதே 16 பவுண்டு எடையுள்ள இரும்புக் குண்டை 3 10 1/2 அல்லது 11 3/4 அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பி (wire)யில் சேர்த்து, சுற்றி சுழற்றி வீசி எறிவதால், இதை சங்கிலிக் குண்டு வீசி எறிதல் என்று சொல்கிறோம்.


இந்தப்போட்டி முறை, அயர்லாந்து நாட்டில் தொடங்கியது என்று கூறுவர். அதற்குரிய நிகழ்ச்சியை