பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


170 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


பின்வருமாறு வருணிப்பார்.அந்நாட்டின் தொழிற்சாலை யில் பணியாற்றிய தொழிலாளர்கள், தாங்கள் வேலை செய்ய வைத்திருக்கும் சுத்தியை (Hammer) எவ்வளவு துாரம் வீசி எறிய முடியும் என்பதை அறிய விளை யாட்டாகத் தொடங்கினார்கள். அந்தப் பொழுது போக்கு, விளையாட்டாகப் பண்படுத்தப்பட்டு, இந் நிகழ்ச்சியாக மாறியது என்பர்.


எறிய உதவும் சுத்தியின் கைப்பிடிக்குப் பதிலாக நீண்ட இரும்புக் கம்பியும், அடிக்கின்ற தலைப்பாகத் திற்குப்பதிலாக உருண்டையான இரும்புக் குண்டும் மாறி வந்தது என்று கூறுவர்.


இதை எறியக் கூடியவரின் தகுதிகள் நல்ல உயரம்: வலிமையான தேகம், விரைவோட்டக்காரருக்குரிய உடல் வேகம் இரும்புக் குண்டு எறிவோருக்கான உடலமைப்பு: தட்டெறிவோருக்கான எறியும் லாவகம், 7 அடி வட்டத்திற்குள்ளே 16 அடிக்குண்டினை சுற்றி, தானும் பம்பரம்போல மூன்று முறை சுற்றும்போது, உடல் சமநிலையை இழந்துவிடாத சக்தியுள்ளவர்கள் தான் இப்போட்டிக்குத் தேவை.


கைகளின் வலிமையால் மட்டுமே இரும்புக் குண்டினை வீசி எறிவதில்லை. உடலின் சக்தியை முழுதும் பயன்படுத்தியே எறிய இயலும் என்பதை உணர்வது மிகமிக முக்கியம்.


பள்ளிப் பையன்களுக்கு 12 பவுண்டு எடையுள்ள


இரும்புக் குண்டு போதுமானது. அதுவே பழகுதற்கும் எளியதாக இருக்கும்.