பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


174 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இடதுகால் எடையுடனே வலதுகால் மாறிவரும் போது தான், உடல் சமநிலையைப் பெறும்.


வலது காலை ஊன்றிய பிறகு, மூன்றாவது சுற்று வந்துவிடும். அப்பொழுது விரைந்து, வேண்டிய பல துடன் வேகமாகக் கம்பியைச் சுற்றிவிட்டு, நிற்கும்போது வட்டக் கோட்டிற்கருகே இடதுகால் வந்துவிடும். அந்த நிலையில் இரும்புக் குண்டு வலதுகைத் தோளுக்கு மேற்புறத்திலே இருக்கும். அது எறியும் பரப்பிற்கு இணையாக வந்து கொண்டிருக்கும் வேகத்திலேயே இடதுகால் குதிகாலின் பலத்தில் விறைப்பாக நிற்க, வலது முழங்கால் சிறிது வளைந்திருக்க இரு கைகளையும் விறைப்பாக நீட்டி அப்படியே வீசி எறிய வேண்டும்.


மூன்று முறை சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் மாறுபட்ட வேகத்தை அதிகரித்துக் காட்ட வேண்டும். உடல் சமநிலை இழக்காமலிருக்க முழங்காலின் வளைவும் உடல் பின்புறமும் பக்கவாட்டில் வளைவதையும் கவனித் துக் கொள்ள வேண்டும்.


வட்டத்திற்குள்ளே தடுமாற்றமில்லாமல் சுற்று வதும், உடல் எடை முழுவதையும் இடது குதிகாலிலே வைத்து, சுற்று முறையை சுமுகமாகச் செய்வதும் அவசியம் என்பதை உணர்தல் நல்லது.


மூன்றாவது சுற்றின் பாதியிலேயே, தலை சிறிது பின் புறமாகச் சாய, கண்கள் மேல் நோக்கிப் பார்க்க, சங்கிலிக் குண்டை வீசி எறிய வேண்டும்.


இதற்கான பயிற்சிகள் யாவை?


மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் இரும்புக் குண்டைவீசி எறிவதில் சாதனை நிகழ்த்தியவர் ஹெரால்டு