பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


பயன் : செங்குத்தாகத் துள்ளிக் குதிக்க இப்பயிற்சி நிறைய உதவும். *


5. குறுக்குக் குச்சியை தாழ்வாக கம்பங்களுக் கிடையே வைத்து, தாண்டுபவரை, பல முறை ஓடிவந்து குதிக்கச் செய்தல். அதாவது ஒடி வருவது, தாண்டி குதிப்பது, மணலில் விழுவது, பிறகு ஓடிவருவது குதிப்பது என்பதாக, இடையிலே நிறுத்தாமல், பல முறை செய்தல்.


பயன் : உயரத்தைக் காலூன்றித் தொடும் சரியான இடம் எது என்பதை தெரிந்து கொள்ளவும், தாண்டக் கூடிய மனோ வலிமையையும், தன்னம்பிக்கையையும்


இப்பயிற்சி வளர்க்கிறது. 3. எறிவதற்கான பயிற்சி முறைகள்:


(a) இரும்புக் குண்டு எறிதல் :


1. அதிக எடை போட்டியில் எறியும் இரும்புக் குண்டின் எடையைவிட அதிகமான எடையுள்ள இரும்புக் குண்டை எறிந்து பழகுதல்.


பயன் கைகளுக்கு வலிமை தருவதுடன், போட்டி நேரத்தில் அதிக தூரம் எறியும் ஆற்றலையும் தன்னம் பிக்கையையும் நல்கும்.


2. பின்புற எறி: கால்களை அகலமாக விரித்து நின்று இரண்டு கைகளாலும் இரும்புக் குண்டை பிடித்தவாறு தலைக்கு மேலிருந்து தரைப் பகுதிக்கு வந்து கால்களுக்கு இடையிலும் போவது போல் இரும்புக் குண்டைக் கொண்டு வந்து ஏற்றி இறக்கி (Swing).அவ்வாறு பலமுறை செய்து, தலைக்குப் பின்புறமாக இரும்பு குண்டை வீசி GTolgb. (Backward Throw)