பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


184 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வேண்டும். 2. முன்பு கூறியவாறு தட்டைப் பிடித்தபடி, தரையில் உருட்டியது போலவே, மேல் நோக்கி (அந்தரத்தில் உருட்டி) எறிய வேண்டும்.3. முன் போலவே வைத்து, கடிகாரம் சுற்றுவது போன்ற அமைப்பில் தட்டு சுழல்வது போல, பக்கவாட்டில் வீசி எறிய வேண்டும். 4 அதிகமான எடையுள்ள தட்டினை எறிய பயன்படுத் தலாம். 5. முதலில் வலது காலில் உடல் எடை முழுவதும் இருப்பது போல நின்று தட்டினை முன்னும் பின்னும் சுழற்றி வந்து, இடது காலில் உடல் எடை வருவதுபோல, எறியும் போது பழகிக் கொள்ளவும் 6. முழு சுற்று சுற்றி எறிவதற்கு முன், (Pivot), அரை சுற்றில் வேகமாகத் தட்டெறியவும் பழகவும்.


3. வேலெறிதல் : எறியும் திறமையுடன், வேகம், வலிமை, நெகிழும் ஆற்றலுடன், மார்புத் தசைகள், தோள் பகுதி, மற்றும் கைகளுக்கு நல்ல வலிமையளிக்கும் பயிற்சி களைச் செய்து, பலமாக இருக்க வேண்டும். 1. வேலினை தோள் உயரத்திற்கு மேல் வைத்துக் கொண்டு, இடுப்பைச் சுழற்றுவது போல திருப்பி, அதே வேகத்தில் வேலினை எறிய வேடும். 2. நின்ற நிலையில் எறிந்து பழகிய பிறகு, இரண்டு மூன்று காலடிகள் நடந்து, பிறகு இடுப்பை வளைத்து, வேகமாக எறிந்து பழகவும், 3.பின்னர், ஓடிவந்து எறியும் முறையைப் பின்பற்றவும்.


பயன் தரையை வலிமையுடன் உதைத்து உந்துவ தால், முழங்கால்களை மேலே உயர்த்தி ஒடவும், அதிகக் காலடி இடைவெளி போடவும் இப்பயிற்சி உதவுகிறது.


5. நின்ற இடத்தில் ஓடுதல் : ஒரு கம்பம் அல்லது சுவரைப் பிடித்தபடி நின்று, தரையை உந்தி உதைத்து ஒடும் பாவனையில் நின்ற இடத்திலிருந்தே ஒடுதல்.