பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 187


உடல் தகுதி மிக்க வளமையுடன் என்றும் இருக்க முக்கியமாக உதவும் உணவுப் பொருட்கள், பச்சைக் காய் கறிகள், பால், பழங்கள், பார்லி உணவு, முட்டை, கறி, மீன், எண்ணெய், கோதுமை ரொட்டி முதலியன,


பழங்களில் வாழை, ஆரஞ்சு, அன்னாசி, ஆப்பிள், திராட்சை, மாம்பழம் போன்ற சுவைமிகு கனிகளையும், ஆட்டுக்கறி, கோழிக்கறி, மாட்டு மாமிசம் மற்றும் மனிதர் விரும்பி உண்ணுகிற மாமிச வகைகளையும், பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகளையும் அவ்வப்போது, முடிந்தால் அனுதினமும் உணவுடன் சேர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது.


மேற்கூறிய உணவுப் பொருட்களை எந்நேரமும் சேர்த்துக் கொள்ளலாம். பயிற்சி காலங்களில் உணவு அதிகம் தேவைப்படும். சாப்பிடலாம். ஆனால் போட்டி நாட்களில் விரும்பியவற்றை எல்லாம் சாப்பிடக்கூடாது. சாப்பிடமுடியாது, மீறி விரும்பியவற்றை சாப்பிட்டு விட்டால். விரும்பிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியை வழி அனுப்பிவைத்துவிட்டு, வதங்கிய முகத் துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை.


எனவே, போட்டிநாட்களில் அனுசரிக்க வேண்டிய ஒரு சில முறைகளைக் கவனிப்போம்.


போட்டி நாட்களில் பொதுவாக மாலை இரண்டு மணிக்குத்தான் தொடங்குவார்கள் என்றால், காலையில் வழக்கம்போல் சிற்றுண்டி சாப்பிடலாம். ஆனால் மதிய உணவை, போட்டித்தொடங்கும் நேரத்திற்கு 3 மணி