பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


விளையாட்டரங்கத்திலே ‘சீயஸ்’ என்ற கடவுளின் பீடம் இருக்கும். அப்பீடத்திற்கு முன்னே போட்டி யாளர்கள், அவர்களுடைய தந்தைமார்கள், சகோதரர்கள் அனைவரும் வந்து அணி வகுத்து நிற்க, பீடத்திலே பன்றி ஒன்று பலியிடப்படும். அந்த இரத்தத்திலே கீழே காணும் முறையில் வீர சபதம் எல்லோரும் எடுத்துக் கொள் வார்கள்.


“நாங்கள் எல்லாம் தூய்மையான கிரேக்கர்களே. போட்டியிலே வெற்றி பெறுவதற்காக நாங்கள் எவ்வித மான கீழ்த்தர முயற்சிகளையும் பின்பற்ற மாட்டோம். போட்டியில் வெற்றி பெற உண்மையிலேயே பத்து மாதம் கடுமையான பயிற்சிகளைச் செய்திருக்கிறோம்.”


பந்தயங்களை நடத்துகின்ற அதிகாரிகளும் (officials) “நாங்கள் போட்டியை பாரபட்சமற்ற முறையில் நடத்துகிறோம் என்று பன்றியின் இரத்தத்தைத் தொட்டு உறுதி கூறுவார்கள்.


முதல் நாள் வீர சபதம் எடுத்துக் கொண்ட பிறகு, இரண்டாம் நாள் காலையில் குதிரைப் பந்தயம், தேர்ப் பந்தயம் (chariot) நடக்கும். மாலையில் ஒட்டம், தட்டெறிதல், வேலெறிதல், எடையுடன் தாண்டல், மல்யுத்தம் போன்ற ஐந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.


மூன்றாம் நாள் விழாக்கோலம். விருந்துண்ணல், ஊர்வலம் வருதல். அன்று சீயஸ் பீடத்தின் முன்னே 100 காளைகள் பலியிடப்பெறும். நான்காம் நாள் ஒட்டப் பந்தயங்கள், மல்யுத்தம், குத்துச் சண்டை, இருவர் தனித்து செய்யும் சண்டைநடக்கும். ஐந்தாம் நாள் போர்க் கோல உடைகளான கவசம், இரும்புத் தொப்பி, கையுறை, காலுறைகளோடு ஒடல், தாண்டல், எறிதல்,