பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


முன்காலாகப் பயன்படும். இடது கால் பயன் பட்டால் அது முன்கால். வலது கால் பின்காலாகும்.


ஓடுவதற்கு முன் எவ்வாறு உட்கார வேண்டும்?


‘உங்கள் இடத்தில் இருங்கள்’ (Onyourmarks) என்ற ‘ஒடவிடுபவரின் உத்தரவுக்குப் பிறகு, ஒட இருக்கும் ஒட்டக்காரர்கள், தங்கள் ஒட வேண்டிய ஒடும் பாதை (Track) யில் முன் கூறிய மூன்று வகையான உட்காரும் நிலை'யில் ஏதாவது ஒன்றைக் கடைபிடித்து உட்கார வேண்டும்.(எவ்வாறு உட்காருதல் என்பதை பயிற்சியாளர் களிடம் அணுகி அறிக)


முன்கால் ஒட உதவும் சாதனத்தின் முன்பும், பின்பகுதியில் பின்காலும் இருக்கைகள் இரண்டையும் சாதாரணமாக முன்னும் பின்னும் வீசிப் பார்த்தால் எவ்வளவு இடைவெளி இருக்குமோ, அந்த அளவு இடைவெளி விரல் ஒரு பக்கமாகவும், மற்ற விரல்கள் மறு பக்கமாகவும் இருக்குமாறு விரித்து ஊன்றி, உடலின் எடை முழுதும் கைகளிலும் பின்காலிலும் இருக்குமாறு வைத்து, தலை கவிழ்ந்த நிலையில் இருக்க வேண்டும்.