பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வேகமாக தைத்து, ஊன்றியுள்ள கைகளைத் தரையி லிருந்து உடனே எடுத்து, இடது கை முன்னே செல்ல, வலது முழங்கை நிமிர்ந்து கொள்ள, உடலை முன்புறம் சாய்வாகவே இருப்பதுபோல் ஒடத் தொடங்க வேண்டும்.


உடலை இறுக்காமலும் முறுக்காமலும் இயல் பாகவே தொடக்கம் இருக்கவேண்டும். முதலில் எடுத்து வைக்கின்ற காலடி (Step) அதிக இடைவெளியுடன் இருக்கவேண்டும். அடுத்த காலின் காலடி அதைவிடக் குறைந்த அளவு இருக்க வேண்டும். குனிந்து கொண்டே இருந்துவிட்டு, வேகமாக ஒடத் தொடங்கும் போது உடலை உடனே நிமிர்த்தி விடக்கூடாது. குறைந்தது பத்துப் பனிரெண்டு மீட்டர் தூரம் ஒடும்வரையில் கொஞ்சங் கொஞ்சமாக நிமிரும்போதுதான், இயல்பான வேகம் கிடைக்கிறது.அப்பொழுதுதான் ஒடும் காலடியின் இடைவெளியும் சரியான அளவு கிடைக்கிறது.


தொடர்ச்சி ; உடலை நிமிர்த்திய பிறகு, முழங்காலும் நிமிர்ந்தநிலைக்கு வந்துவிடும். அப்பொழுது கால்களை 2 uuri#$ 606 og Gurren gp1_GGuGIGLb. (High knee action). பாதங்களால் தான் ஒடவேண்டும். குதிகாலை ஊன்றி ஒடக்கூடாது.


இடுப்பின் இயல்பான, அசைவு தோள்களின் சமநிலை கண்களின் நேரான நோக்கு, தலை சீராக நிமிர்ந் திருக்க, (குறைந்தது) 20 மீட்டர் தூரம் வரை பார்க்கலாம்) ரயில் எஞ்சினில் இயங்கும் உலக்கைபோல, இருகைகளும் உடலை ஒட்டியவாறு முன்பின்னாக இயங்கவேண்டும்.


தலையை இருபுறமும் அசைப்பதும், கீழே குனிந்து கொண்டு ஒடுவதும், கைகள் இரண்டையும் பக்கவாட்டில் ஊஞ்சலாட விடுவதும், பின்னால் திரும்பிப் பார்க்க