பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வேகமாக ஒடத் தொடங்கி விடுவர். பாதி துரம் வந்ததும் தளர்ந்து படுத்து விடுவர்.


அப்படிப்பட்டவர்களைப் பின்பற்றாது, தினசரி எடுத்துக் கொண்ட பயிற்சியால் விளைந்த வேகத்துடனே ஒடிக் கொண்டிருந்து பிறகு முடிக்க வேண்டும். அதற்குத் தான் ஒரு வட்டத்திற்கு எவ்வளவு நேரம், ஒரு மைலுக்கு எவ்வளவு நேரம் என்று கணக்கெடுத்துக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்து கிறோம்.


ஒருவர், இது போன்ற நெட்டோட்டங்களில் பல முறை வெற்றி பெற்ற வீரர் என்றால், அவரை முன்னாலே ஒட விட்டு விட்டுத் தொடர்ந்து ஒடிக் கொண்டேயிருக்க வேண்டும். கடைசிக் கட்டம் வரும்போது, எந்த இடத்தில் வேகமாக ஆரம்பித்தால், இறுதி வரை வேகமாக ஒட முடியும் என்ற பழக்கமும் பயிற்சியும் உள்ளதோ, அந்த இடத்தில் தொடங்கி, கடைசி வரை ஓடி முடிக்க வேண் டும்.தவறிவிட்டால் வெற்றி வாய்ப்பினை இழக்க நேரிடும்.


போட்டிக்கு வருகின்ற மற்ற விரர்களின் திறமையை மனதில் கொண்டு, முன் கூட்டியே திட்டமிட்டு செயல் பட வேண்டும். அவர்களுக்கு ஏற்றாற்போலவே ஒடி வெல்ல வேண்டும்.


பயிற்சி செய்யும் முறைகள் :


தொடர்ந்து ஒடிக் கொண்டேயிருப்பதுதான் சிறந்த பயிற்சி முறையாகும். எஞ்சினைத் துவக்கிவிட்டால், ஒடிக்கொண்டேயிருப்பது போல ஒட வேண்டும் என்று ஒட்டத்தை ஆரம்பித்து விட்டால், பல மைல்களை நிறுத்தாது ஒடவேண்டும்.