பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 77


மல் தாராளமாக ஓடமுடியும் குறைந்த நேரத்தில் கடக்கும் ாதனையையும் செய்து காட்ட முடியும்.


தடைக்கு முன்னாலே தாவத் தொடங்கும் இடம் 6 அடி என்றால், தாவிக் குதிக்கும் இடம் 3 அடி அல்லது 4 அடி இருக்க வேண்டும். ஆகவே, ஒரு தடையைத் தாண்ட எடுத்துக் கொள்ளும் தூரம் 10 அடியாவது குறைந்தது இருக்க வேண்டும். ஒலிம்பிக் வீரர்கள் அத்தனை பேரும் உயரமானவர்கள். அதாவது 6 அடி உயரத்திற்கு மேல் உள்ளவர்கள். நம் பாரத நாட்டு வீரர் குரு பச்சான் சிங் என்பவர் 1964-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தடை தாண்டி ஒட்டத்தில் நான்காவதாக வந்திருக்கிறார். அவரது உயரம் 5 அடி 10% அங்குலம். அவரே குள்ள மானவர் என்று கூறப்படுகிறார். ஆகவே ஒலிம்பிக் வீரர் கள் ஒரு தடையைத் தாண்ட 13 அடியிலிருந்து 14 அடிக்கு மேல் எடுத்துக் கொள்கிறார்கள்.


தடையை தாண்டிய உடனேயே, அவர் விரை வோட்டக்காரராகவே மாறி விடுகிறார். தாவிக் குதித்த வுடன் தவறி விழுவதோ, தள்ளாடுவதோ இருக்கக்கூடாது. சமநிலை (Balance) சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். உடலை முன்னோக்கி வளைப்பதும், முன் கால் தரையைத்தொட்டவுடனே பின் கால் கீழே வந்து முதல் தப்படியை வைப்பதும், பிறகு ஒடத் தொடங்குவதும் தான் பண்பட்ட முறையாகும்.


மீதித் தடைகளையும் தாண்டி ஒடும் போது தடை யிருந்தாலும் தடையில்லாத ஒட்டம் போல் சரளமாக ஒடிச் செல்ல வேண்டும். தடைக்கு மேல் அதிகம் தாவி நேரத்தை வீணாக்காமல், தரையில் குதித்ததும் தள்ளாடா மல், இரு பக்கத்தில் ஒடுவோரையும் ஏறெடுத்துப்