பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 95


ஒவ்வொரு போட்டிக்குரிய விளக்கத்தையும் அந்தந்த நிகழ்ச்சி வரும் பொழுதுகேட்டால் நலமாக இருக்கும்.


1. நீளத் தாண்டல்


‘நீளத் தாண்டல் பற்றிய குறிப்பையும், எவ்வாறு பயிற்சி செய்வது என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறோம்?


விருப்பம்தான் செயலைக் கற்றுக் கொள்ளத் துண்டும் சிறந்த ஆசான். விருப்பத்திலே பாதி நுணுக்கம் விரைந்து வந்துவிடும். மீதியை நல்ல குருவிடத்தில் கற்றால் குறைந்த காலத்திலேயே மேன்மை எய்திட முடியும்.


வில்வித்தை கற்றுக்கொள்ள விரும்பிய ‘ஏகலைவன்’ என்பவன் எப்படி கற்றான்? குருவின் சிலையை வைத்துக் கொண்டே, அம்புவிடும் கலையில் அனைவரிலும் சிறந்த வனாகவில்லையா? ஆகவே, உங்களிடமிருந்து விருப்பத் தால் எழுந்து வந்த வினா, நம் நாட்டிற்கே ஒரு திருப்பமாக


அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இது மிகப் பழமையான போட்டியாகும். இதற்கு முன்னாளில் ‘அகலத் தாண்டுதல்’ (Broad Jump) என்று பெயர். ஏனென்றால் அகலமான அகழி போன்ற பள்ளத் தைத் தாண்டுவதற்காகத் தொடங்கிய ஒரு சிலருக்குள்ளே எழுந்த பந்தயம்தான். இப்படிப் உலகப் பந்தயமாக, ஒலிம்பிக் நிகழ்ச்சியாக மாறிவிட்டது.


“நின்றுகொண்டே நீளத் தாண்டுதல்’ ‘ஒடி வந்து தாண்டுதல்’ என்று இரண்டு வழிகளிலும் போட்டி இருந் தன.இன்று ஓடிவந்துதாண்டும்போட்டியே (RunningLong lump) 2 Girmsg).