பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இன்று நீளத்தாண்டலில் தலைசிறந்து விளங்குபவர் ‘பாப் பீமன்’ என்ற அமெரிக்க நாட்டு வீரர். இவருடைய சாதனை 29 அடி 2% மாபெரும் சாதனைதான். மனித குலமே வாய் பிளந்து அதிசயித்த சாதனைதான்.


ஏனென்றால் 1896ம் ஆண்டு 20 அடி 9, அங்குலமாக இருந்த இந்த சாதனை, 1936ம் ஆண்டு 26 அடி 5% அங்குலமாக நீண்டது. ஜெசி ஒவன் என்ற அமெரிக்கரால் படைக்கப்பட்ட இந்த சாதனை 25 ஆண்டுகளாக யாரா லும் தகர்த்தெறிய முடியாததாக இருந்தது.1960ம் ஆண்டு இச்சாதனையை அதிகப்படுத்தினார் ரால்ப்ஃபாஸ்டன் என்ற அமெரிக்கர்.அவரது சாதனை26 அடி7% அங்குலம், 1962ல் இதன் சாதனை27 அடி3% அங்குலமாக ரஷ்ய வீரர் டெர் ஒவனேஷியன் என்பவரால் உயர்ந்தது.இப்பொழுது சாதனை இன்னும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும்.


1896ம் ஆண்டு 20அடி 9 அங்குலமாக இருந்ததைவிட, இன்று பெண்கள் அதிகம் தாண்டுகிறார்கள். ருமேனியா நாட்டு வீராங்கனை குமாரி விஸ்கோபாலினு என்பவரின் சாதனை22 அடி,4% அங்குலம் என்றால் பெண்களும் எந்த அளவு திறமை படைத்திருக்கிறார்கள் என்பது புரிகிற


தல்லவா?


நீளத் தாண்டலில் பங்கு பெற வேண்டியவருக்குரிய தகுதிகள் யாவை?


உலக சாதனை ஏற்படுத்திய அத்தனை தாண்டு வோரையும் ஆராய்ந்தால், அவர்கள் அத்தனை பேரும் விரைவோட்டத்தில், உயரக் குதிப்பதில், தடைதாண்டி ஒடுவதில் மிகமிகச் சிறந்தவராகவே இருந்திருக்கின்


றார்கள்.