பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தாரானால், அவர் இன்னும் வசதியுடனும் நிம்மதியுடனும் வாழ்ந்திருக்கலாம். தன் குறையை உணர்ந்து அதனை நிறைவாக்கிக் கொள்கின்றவாறு அறிவைப் பயன்படுத்தி வாழ்ந்துவிட்டால், மனக் குறையெனும் பொய் நோய் வந்து வாலாட்டுமா?

இந்தக் கதையின் நாயகனைப் பாருங்கள். தன்னையறிந்து, தலைவனாகி விட்டான்.

ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற சேதி கேட்டு அரண்மனை ஜோசியர் ஒருவர் ஆனந்தப்பட்டார். தன் குழந்தையைப் பற்றி வருங்காலம் எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்கும்பொழுது, அவன் பயங்கரத் திருடனாகப் பிற்காலத்தில் மாறிவிடுவான் என்பதாக அறிந்தார்.

அரசனின் அன்புக்குப் பாத்திரமான அரண்மனை ஜோசியரின் மகன் திருடனாக வாழ்ந்தால், அவரின் பெயரும் புகழும் என்னவாகும்! ஆழ்ந்த சிந்தனைக்கு ஆளானார். யாருக்கும் தெரியாமல், காட்டில் போய் குழந்தையைப் போட்டுவிட்டு வந்தால்..... இப்படியும் யோசித்தார். காலம் முழுவதும் திருடனின் தந்தை என்று கண்கலங்குவதைவிட, ஒரே நாளில் அழுது தீர்த்து விடலாமே என்றும் யோசித்தார்.

கடைசியில் தந்தை பாசம் வென்றது. அவன் எப்படியாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்! நாம் சகல கலைகளிலும் அவனை வல்லவனாக்கி விடுவோம் என்று கல்வி கேள்விகளில் சிறப்புறப் பயிற்றுவித்தார். தந்தையைப் போவவே அவனும், கைரேகை கலையிலும் அற்புத ஆற்றல் படைத்தவனாக விளங்கினான். அவனது