பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

53


நிமிடம் அவகாசம் தருகிறேன், அதற்குள் உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அந்த அளவுக்குச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். எதையும் வெளியிலே எடுத்துக் கொண்டு வரமுடியாது. முடிந்தவரை சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ‘பத்து நிமிடம்தான் அவகாசம்’ என்றான். சரியென்று உள்ளே நுழைகின்றனர் நண்பர்கள்.

திகம்பரம் ஒரு புறம் சென்றான். சிதம்பரம் மறுபுறம் சென்றான். ஒருவர் தின்பது மற்றொருவருக்குத் தெரியக் கூடாது என்பதனாலா? தாயும் பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறு என்பார்களே, அது போல, இவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள் போலும்.

‘பத்து நிமிடம் ஆகிவிட்டது. வெளியே வாருங்கள்’ என்று கூச்சல் போட்டான் காவலாளி. அவன் போட்ட சத்தத்திற்குப் பயந்து, இருவரும் விரைந்து வெளியே வந்தனர், திகம்பரம் தெம்பாக நடந்து வந்தான். அவனது முகத்திலே திருப்தியில் திளைத்த மனத்தின் சாயல் ஒளிர்ந்தது. சிதம்பரமோ, உள்ளே போவதற்கு முன் இருந்த களைப்பைவிட, மேலும் அசதியடைந்தவனாகத் தள்ளாடி வெளியே வந்தான். காவலாளி சிதம்பரத்தைப் பார்த்து. ‘பிழைக்கத் தெரியாத பிள்ளை’ என்று தலையிலடித்துக் கொண்டான். பின்னர் திகம்பரத்தை முதுகிலே தட்டிக் கொடுத்து ‘போய் வா’ என்று வாழ்த்தியும் அனுப்பினான். தள்ளாடியபடியே நடந்தான் சிதம்பரம்.

பத்து நிமிடத்திற்குள்ளே பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றவுடன். உள்ளே போன